சூர்யாவின் நண்பருக்கு ஃபோன் பண்ண அருணாச்சலம், விஜி சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் விஜியிடம் நந்தினி நீங்க என்கிட்ட பொய் சொல்லுவீங்கன்னு நான் நினைக்கல. நீங்க இப்படி செய்வீங்கன்னு நான் நினைச்சு கூட பாக்கல. உங்கள நான் எவ்வளவு நம்புனா தெரியுமா நீங்க ஏன் என்கிட்ட மறைச்சீங்க. இந்த வீட்டில நான் ரொம்ப நாள் இருக்க மாட்டேன்னு உங்களுக்கு தெரியும் அப்படி இருக்கும்போது நீங்க எப்படி ரிஜிஸ்ட்ரேஷன்க்கு ஒத்துக்கிட்டீங்க. இப்படி நடக்குதுன்னு ஒரு வார்த்தை என்கிட்ட சொல்லி இருக்கலாமே என்று கேட்க, நானும் சொல்லாததற்கு ஆயிரம் காரணம் சொல்லலாம் நந்தினி எதுவா இருந்தாலும் நம்ம நாளைக்கு நேர்ல பேசிக்கலாம் என்று போனை வைத்து விடுகிறார்.
மறுநாள் காலையில் நந்தினி கிச்சனில் வேலை பார்த்துக் கொண்டிருக்க கல்யாணம் வருகிறார். ஆனால் நந்தினி இடம் பேசாமல் கல்யாணம் கோபமாக இருக்க என்ன ஆச்சு அண்ணா என்று கேட்கிறார். உடனே கல்யாணம் உன்னை இந்த வீட்ல இருக்க வைப்பதற்கு அய்யா எவ்வளவு கஷ்டப்படுறாரு ஆனா நீ முடியாதுன்னு சொல்லிட்டு வர உன் மனசுல என்ன நினைச்சுகிட்டு இருக்க ஒரு பெரிய மனுஷன் உன்கிட்ட எவ்வளவு தன்மையான நடந்துக்கிறார் என்று சொல்கிறார். உடனே நந்தினி என் நிலமை தெரிஞ்சுக்கிட்டு நீங்களும் இப்படி பேசுறீங்க என்று கேட்க, சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி வாழ கத்துக்கணுமா என்று சொல்ல அதற்கு நந்தினி என்னோட தன்மானத்தையும் சுயமரியாதையோ யாருக்காகவும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று சொல்ல பட்டத்து ராணியா இருமானு சொன்னா பத்து பாத்திரம் தான் தேய்ப்பேன் என்று சொன்னா நான் என்ன பண்ண முடியும் என்று சொல்லுகிறார்.
பிறகு நந்தினி தாலிக்கயிறு சரி பண்ண என்ன ஆச்சு என்று கேட்கிறார். கயிறு அறுந்து விழர மாதிரி இருக்கு என்று சொல்ல இது ஒரு நல்ல சகுனம் இல்ல உனக்கு தெரியும் இல்லம்மா என்று சொல்ல, அதுக்கெல்லாம் நம்ம மனசு தானா காரணம் என்று சொல்லுகிறார். தாலி பிரிச்சி மாத்த வேண்டும் என்று கல்யாணம் சொல்ல, நான் இந்த கல்யாணமே வேண்டாம் என்று சொல்லிக்கிட்டு இருக்க நீங்க தாலி பிரிச்சு கவுக்குறத பத்தி பேசுறீங்க என்று நந்தினி சொல்ல, இது வேலைக்கு ஆகாது என்று சொல்லிவிட்டு கல்யாணம் நேராக நான் போய் அய்யா கிட்ட சொல்றேன் என்று சொல்லி வந்து விடுகிறார். சின்னையவுக்கு கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் நந்தினி அம்மாக்கு தாலி பிரிச்சு கவுத்து இருக்கணும் கிச்சன்ல பார்த்தால் தாலி அறுந்து போற மாதிரி இருக்கு. என்று சொல்லி கண்கலங்கி கொண்டு பேசுகிறார். வேலைக்கார சொல்லி உங்களுக்கு தெரியணும்னு இல்ல என்னால தெரிஞ்சுகிட்டோம் இந்த குடும்பத்து மேல அக்கற இல்லாம இருக்க முடியல என்று சொல்லி அழுகிறார். உடனே கல்யாணத்திடம் ரொம்ப நன்றி கல்யாணம் இது நான்தான் பண்ணி இருக்கணும் தப்பு பண்ணிட்டேன் என்று சொல்லுகிறார். எனக்கு உறவுக்காரங்க யாரும் இல்லையா அந்த நந்தினி புள்ளைய என் தங்கச்சியா நினைச்சுக்கிட்டு இருக்க, சின்னையாவும் நந்தினியும் சந்தோஷமா வாழனும் ஐயா என்று சொல்ல, அருணாச்சலம் இந்த தாலி பிரிச்சி கவுக்குற ஃபங்ஷனை எவ்வளவு சிறப்பா பண்ற பாரு என்று சொல்லிவிட்டு சூர்யாவிடம் வருகிறார்.
சூர்யாவை எழுப்பி நந்தினிக்கு தாலி பிரித்து கோர்க்கும் விஷயத்தை சொல்ல, சரி பண்ணுங்க டாடி நான் ஏதாச்சும் ஹெல்ப் பண்ணனுமா என்று கேட்கிறார். என்னடா வேற யாருக்கும் உதவி பண்ற மாதிரி கேக்குற என்று அருணாச்சலம் கேட்கிறார்.தாலி பிரிச்சி கோக்கிறதுனா என்னனு உனக்கு தெரியாதா என்று கேட்கிறார். இந்த பங்க்ஷன் நடக்க உங்கம்மா விடமாட்டா, இந்த பங்க்ஷன் நடந்தா நந்தினியை மருமகளா ஏத்துக்கிற மாதிரி ஆயிடும் அதனாலதான் என்று சொல்ல சூர்யா அப்போ உடனே சிறப்பாக பண்ணிடலாம் என்று சொல்லி முடிவெடுக்கிறார்.
நந்தினியிடம் வந்த அருணாச்சலம் மன்னிப்பு கேட்க தெரியாம தப்புங்க நடக்கிறது சகஜம் தான் வீட்ல பிரச்சனை நடந்து இருந்தாலும் இந்த பங்க்ஷன் பண்ணி இருக்கணும். அத நெனச்சா எனக்கு அவமானமா இருக்கு என்று சொல்லுகிறார். நான் கல்யாணம் அண்ணா கிட்ட சொல்ல வேணாம்னு தான் சொன்னேன் ஆனா அவர் சொல்லிட்டாரு என்று சொல்ல, சொன்னது கல்யாணம்தான் ஆனால் அவ சொன்னதுல எந்த தப்பும் இல்ல என்று சொல்லுகிறார். மீண்டும் அருணாச்சலம் வருத்தப்பட நந்தினி நான் நடந்ததை கல்யாணமா நினைக்கல இந்த தாலி கயிறு பிரிஞ்சதுல எனக்கு எந்த ஒரு வருத்தமும் இல்லை, நானே ஒரு கயிறு வாங்கி போட்டுக்கிறேன் என்று சொல்ல அது என்ன நீயே வாங்கி போட்டுக்கணும் அதே ஒரு பத்து பேர் வச்சு செஞ்சா எப்படி இருக்கும் கண்டிப்பா இந்த பங்க்ஷன் சிறப்பா நடக்கும் என்று சொல்லுகிறார்.
அருணாச்சலம் சிங்காரத்திற்கு போன் போட்டு நந்தினிக்கு தாலி பிரித்து கோர்க்கும் விஷயத்தை பண்ணனும், இதை ஏற்கனவே பண்ணி இருக்கணும் இதுக்கு மேல தள்ளி போட முடியாது பண்ணிடலாம் என்று சொல்ல, எனக்கும் இது தோணுச்சு ஐயா இது எப்படி கேட்கிறது என தெரியல ஆனா நீங்களே சொல்லிட்டீங்க என்று சந்தோஷப்படுகிறார். ஜோசியர் கிட்ட கேட்டு ஒரு நல்ல நாளா சொல்றேன் குடும்பத்தோட வந்துருங்க என்று சொல்ல கண்டிப்பா சந்தோஷமா வந்துருவான்யா என்று சொல்லி, ஆனால் என்று இழுக்க எனக்கு தெரியுது சுந்தரவல்லி பத்தி தானே அதெல்லாம் எதுவும் பிரச்சனை இல்ல பாத்துக்கலாம் என்று சொல்லி ஃபோனை வைக்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் அருணாச்சலம் சூர்யாவின் நண்பனுக்கு போன் போட்டு விஜியிடம் பேச வேண்டும் வீட்டுக்கு வர சொல்லி சொல்லுகிறார். சரி என சொல்லிவிட்டு சூர்யா பக்கத்தில் குடித்துக் கொண்டிருக்க அப்பா தான் பண்ணாரு என்ன விஷயம் என்று கேட்க விஜிய வீட்டுக்கு வர சொல்றாரு என்று சொல்லுகிறார். சரி அப்பா சொன்னா ஏதாவது விஷயம் இருக்கும் சொல்லி அனுப்பி விடு என்று போன் போட விஜி எடுத்து பேசுகிறார்.
அங்கிள் உன்னை வீட்டிற்கு வர சொன்னாரு எதுவும் முக்கியமான விஷயம் பேசணுமா என்று சொல்ல சரி நான் போறேன் என்று சொல்லுகிறார் மீண்டும் சூரியா குடித்துக் கொண்டே இருக்க அவரது நண்பர் இன்னும் நான் ஒரு வாய் கூட குடிக்கல என்று சொன்னவுடன் சூர்யா அவரை பக்கத்தில் இழுத்து வாயிலிருந்து காத்த இழுத்து அவர் மூஞ்சில் ஊத அவர் அப்படியே சூர்யா மேல் சாய்ந்து கொள்ள சூரியா கட்டிப்பிடித்துக் கொள்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்க்க தெரிந்து கொள்வோம்.