விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்.. வெளியான புதிய தகவல். !
விடாமுயற்சி படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார்.இவரது நடிப்பில் விடாமுயற்சி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. மகிழ்திருமேனி இயக்கத்திலும், லைகா புரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
மேலும் திரிஷா, ஆரவ், அர்ஜுன், போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என்ற படக்குழு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் நேற்று படக்குழு சில தவிர்க்க முடியாத காரணங்களால் விடாமல் முயற்சி திரைப்படம் பொங்கல் வெளியீட்டில் இருந்து தள்ளி வைத்து உள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது.
இதனால் அஜித் ரசிகர்கள் பலரும் அப்செட்டில் இருந்தனர். ஆனால் தற்போது இந்த படத்தில் ரிலீஸ் குறித்து தகவல் ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது ரிலீஸ் தேடிய இந்த மாதம் இறுதிக்குள் பட குழு வெளியிட அதிக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்து இருந்து பார்க்கலாம்.