தாலி செயின் வாங்க கிளம்பிய குடும்பத்தினர், எதிரில் வந்து நின்ற சுந்தரவல்லி? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னதிரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் சூர்யாவை நந்தினி கைத்தாங்கல் ஆக பிடித்து வந்து பெட்ரூமில் உட்கார வைக்கிறார். பிறகு ஷூ கழட்டி விடுறேன் என்று சொல்லி கழட்டிவிட்டு பார்த்து வந்திருக்கலாம் என்று சொல்ல, நான் தான் கவனமாய் இருந்திருக்கணும் என்று சொல்லுகிறார். அந்த நேரம் பார்த்து அருணாச்சலம் வந்து உட்காருகிறார். உனக்கு இது கடவுள் கொடுத்த ஒரு எச்சரிக்கையா நினைச்சுக்கோ இதுக்கப்புறம் ஆவது அந்த கருமத்தை குடிக்கிறது நிறுத்திடு என்று சொல்லி அட்வைஸ் கொடுக்கிறார்.
மறுபக்கம் சுந்தரவல்லி கோபமாக ஆபீஸ் விஷயமாக போனில் பேசிக்கொண்டு இருக்க அந்த நேரம் பார்த்து மாதவி வந்து கூப்பிட வர ஒரு நிமிஷம் இரு என்று சைகையில் காட்டுகிறார். அருணாச்சலம் நந்தினி இடம் நீ கொஞ்சம் வெண்ணீர் எடுத்துக் கொண்டு வந்து ஒத்தடம் கொடும்மா என்று சொல்ல அதெல்லாம் வேணாம் டாடி என்று சொல்லுகிறார். எதுக்குமே எமோஷனல் ஆகாம ஏன்டா இப்படி இருக்க என்று அருணாச்சலம் கேட்க சுரேகா ஒன்று இல்லப்பா அவனுக்கு எமோஷனல் நரம்பு கட் ஆகி இருக்கும் அதனால என்று சொல்ல என்ன குட்டி கொழுக்கட்டை அடிபட்டதனால இப்படி பேசுறியா அவ்வளவுதான் என்று சொல்லுகிறார்.
மாதவி சுந்தரவல்லியிடம் சூர்யாவிற்கு அடிபட்ட விஷயத்தை சொல்ல சுந்தரவல்லி பதறிப் போய் மேலே வர அவரை தடுத்து நிறுத்தி நான் உள்ள போய் பார்த்துட்டு வரேன் நீ இங்கேயே நில்லுங்க என்று சொல்லுகிறார். உள்ளே வந்த மாதவி சுரேகாவிடம் நந்தினி அனுப்ப சொன்னேன் அனுப்பவில்லையா என்று கேட்டுவிட்டு, நந்தினியை கொஞ்ச நேரம் வெளியே இருக்க சொல்லுகிறார். ஆனால் சூர்யா நந்தினியை நிறுத்தி எதற்கு நந்தினி வெளியே போகணும் என்று கேட்க அம்மா வெளியே வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காங்க அவங்க வந்து இங்க பேசினா எதுக்கு தேவையில்லாம பிரச்சனை அதனால தான் என்று சொல்ல என்ன வேணா இருக்கட்டும் நந்தினி என்னோட பொண்டாட்டி இது என்னோட ரூம் என் பொண்டாட்டி என் இங்க தான் இருப்பா இஷ்டம் இருந்தா பாக்க சொல்லு இல்லன்னா அப்படியே கிளம்ப சொல்லு என்று சொல்லுகிறார்.
உடனே மாதவி வெளியே வந்து சுந்தரவல்லி ரூமுக்குள் அழைத்து வர சுந்தரவல்லி பார்த்து விட்டு எப்படி அடிபட்டுச்சான், டாக்டர் என்ன சொன்னாங்க ஸ்கேன் எடுக்க சொன்னாங்களா என்றெல்லாம் கேட்க சூர்யா ஸ்கேன் எடுக்கணும் இங்க இருக்குறவங்களோட மனசுல என்ன நினைக்கிறாங்கன்னு ஸ்கேன் எடுக்கணும் என்று சொல்லுகிறார். பிறகு சுந்தரவல்லி இனிமேலாவது வண்டிய குடிக்காம ஓட்ட சொல்லு என்று சொல்லுகிறார். கொஞ்ச நேரம் கழித்து சுந்தரவல்லி சூர்யாவின் பக்கத்தில் உட்கார்ந்து கையை தொட போக சூர்யா கையை எடுத்துக் கொள்கிறார். இதனால் சுந்தரவல்லி அங்கிருந்து வெளியே வந்து கண்கலங்கி அழுகிறார். மாதவியும் சுரேகாவும் சமாதானப்படுத்த, எதுக்குமே அழாத நீங்க ஏம்மா அழறீங்க என்று கேட்க அவன் நான் பத்து மாசம் சுமந்து பெத்தவன் அதனால அழுகை கூடாத, அவ கையில அடிபட்டு இருக்கிறத தொட்டு பாக்க கூடாதா கைய ஒதர நான் பெத்த பையன் தானே என்று சொல்லி அழுது கொண்டு இது எல்லாத்துக்கும் காரணம் அவதான அவ வந்ததுக்கப்புறம் தான் என் புள்ளையை என்கிட்ட இருந்து நிரந்தரமா பிரிச்சிட்டா. இது எல்லாத்துக்கும் அவ மட்டும்தான் காரணம் என்று சொல்லி விட்டு அழுது கொண்டே கீழே சென்று விடுகிறார். மறுபக்கம் நந்தினி விஜி தாலிக்கயிறு பற்றி சொன்ன விஷயத்தை யோசித்துப் பார்க்கிறார். பிறகு அருணாச்சலம் சூர்யாவிடம் இவ்வளோ பேர் வந்து உன்கிட்ட ஏதோ ஒரு விஷயம் சொல்றாங்கன்னா அது புரிஞ்சுக்க பாரு இல்லன்னா வேற எதுவும் சொல்றதுக்கே இல்ல என்று சொல்லி மனம் வருந்தி பேசுகிறார். உடனே நந்தினி பாத்தீங்களா சார் அய்யா எவ்ளோ மனசு வருந்தி போறாரு, ஏன் சார் புரிஞ்சிக்கவே மாட்றீங்க என்று சொல்ல இப்ப எதுக்கு எனக்கு ஆளாளுக்கு அட்வைஸ் பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்று சொல்லுகிறார் அதெல்லாம் சொல்லி புரிய வைக்க வேண்டிய விஷயம் இல்லை என்று சொல்ல இப்ப நீ என்ன சொல்ல வர தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் சொல்ல வரியா என்று சொல்ல பழமொழி எல்லாம் நல்லா பேசுறீங்க ஆனா அது வாழ்க்கையில தான் நடத்தி காட்டுவதில்லை என்று சொல்லுகிறார் நந்தினி. பிறகு சூர்யா சரி நீ போய் படுத்துக்கோ என்று சொன்னால் அவரும் படுத்துக்கொண்டு நந்தினியும் படுத்து கொள்கிறார்.
நந்தினி அருணாச்சலத்திடம் வந்து எனக்கு நீங்க சொன்னதுல விருப்பம் இல்ல தான் ஐயா ஆனால் என்னால் யாரும் கஷ்டப்பட வேண்டாம் என்று சொல்லிவிட்டு தாலி பிரிச்சு கவுகுற ஃபங்ஷன் நடத்தலாம் என்று ஒத்துக்கொள்கிறார். ஆனா இன்னொரு விஷயம் ஐயா தாலி பிரிச்சு கோக்குற பங்ஷனுக்கு எப்படியோ எங்க வீட்டுல கூப்பிடுவீங்க இல்ல ஆனா கூப்பிட வேணாம் ஏற்கனவே தீபாவளி அன்னைக்கு ரொம்ப அசிங்கப்பட்டு போயிட்டாங்க அதனால இங்கே யாரும் வர வேண்டாம் நம்ம செய்ய வேண்டியது செஞ்சுக்கலாம் என்று சொல்ல அப்போ இது கண்டிஷன் என்று அருணாச்சலம் கேட்க இங்கே என் நிலைமையே இதுதான் என்று சொல்லுகிறார்.
வர வச்சி காயப்படுத்தி அனுப்புவதை விட வரவைக்காமயே இருந்திடலாம் என்று சொல்ல அருணாச்சலம் சரி பார்த்துக்கலாம் என்று சொல்ல, நந்தினியும் சென்று விடுகிறார். உடனே அருணாச்சலம் ஜோசியருக்கு போன் போட்டு மருமகளுக்கு தாலி பிரிச்சு கோர்க்கணும் ரெண்டு பேரோட ராசி நட்சத்திரம் சொன்னீங்கன்னா பார்த்து சொல்லிட்டேன் என்று சொல்ல அருணாச்சலமும் அவர்களது ராசி நட்சத்திரத்தை சொல்லுகிறார். பிறகு விஜிக்கு போன் போட்டு நந்தினி தாலி பிரித்து கோர்க்கும் பங்ஷனுக்கு சம்மதித்து விட்டதாக சொல்ல விஜியும் சந்தோஷப்படுகிறார். ஜோசியர் கிட்ட கேட்டுட்டம்மா நீ கண்டிப்பா வந்துடனும் என்று சொல்ல சூர்யாவோட சிஸ்டர்ஸ் இருக்காங்களே என்று சொல்லுகிறார். அவங்க இருந்தா கூட நீ தானே நந்தினி இருந்தா கொஞ்சம் நந்தினி நிம்மதியா இருப்பார் என்று சொல்ல அப்போ நான் கண்டிப்பா வரேன் சார் என்று சொல்லுகிறார். நந்தினி இடம் சூர்யா நீ கிராமத்துல இருந்த பொண்ணு ஆனா நீ சிட்டில இவ்வளவு நாள் இருந்திருக்க உனக்கு செட் ஆயிடுச்சா என்று கேட்க செட் ஆகல ஐயா என்று சொல்லுகிறார் எது என்று கேட்க நந்தினி எதுவுமே தான் என்று சொல்லுகிறார்.இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் தாலி செயின் எடுக்க சூர்யாவை அருணாச்சலம் கூப்பிடுகிறார். போட்டுக்க போறது அவதானே என்று சொல்ல போட்டுக்குவது நந்தினி இருந்தாலும் கழுத்துல போட போறது நீதானே என்று சொல்லுகிறார்.
நந்தினி இடம் தாலி செயின் எடுக்க போக கூப்பிட அதுக்கு எதுக்குயா நானும் என்று கேட்க மாதவி அப்பா தான் சொல்றார் வா நந்தினி என்று கூப்பிடுகிறார் அனைவரும் ஒன்றாக வெளியே கிளம்ப சுந்தரவல்லி வந்து எதிரில் நின்று மறுபடியும் எல்லாரும் ஒன்றாக கிளம்பிட்டீங்களா எங்க போறீங்க என்று கேட்கிறார். சுந்தரவல்லி இடம் உண்மையை சொல்வார்களா? என்ன செய்யப் போகிறார்கள்? என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.