Web Ads

மாதவி கேட்ட கேள்வி, நந்தினி சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

moondru mudichu serial today promo 01-04-25
moondru mudichu serial today promo 01-04-25

நேற்றைய எபிசோடில் சூர்யா அருணாச்சலத்திடம் இந்த ஃபுட்டேஜ்ல தான் அவனுங்கள பார்த்ததா நந்தினி சொன்னா என்று சொல்ல அருணாச்சலம் குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் கூப்பிடுகிறார். நந்தினியை கடத்தியவர்களின் சிசிடிவி ஃபுட்டேஜ் யார் பண்ணி இருக்காங்கன்னு பாக்கலாம் என்று சொல்ல, அர்ச்சனா பதறிப்போய் நான் இங்க இருந்து கிளம்புறேன் என்று சொல்ல சூர்யா தயவு செஞ்சு போ என்ற சொல்லுகிறார். ஆனால் அருணாச்சலம் நந்தினி காப்பாற்றினதே அர்ச்சனா தான் இருக்கட்டும் என்று சொல்ல நந்தினியும் இருக்கட்டும் என்று சொல்லுகிறார். திருடங்களா இவங்களும் பார்த்து இருக்காங்க என்று சொல்ல அட்ரஸ் கேட்டுட்டு இருந்தாங்க என்று சொல்லுகிறார்.

உடனே சூர்யா அப்போ இவளுக்கும் தெரியும் உனக்கும் தெரியும் அப்படித்தானே என்று கேட்க ஆமாம் என்று நந்தினி சொல்லுகிறார். அர்ச்சனா பதற்றத்தில் இருக்கா ரேணுகா அந்த நேரம் பார்த்து காபி கொடுக்க உன்கிட்ட கேட்டனா வச்சுட்டு போ என்று திட்டி அனுப்புகிறார். உடனே ஆர்வத்துடன் இந்த போட்டோஸ் தான நந்தினி என்று சூர்யா ஓபன் பண்ண அந்த நேரம் பார்த்து அர்ஜூன் வந்து நிற்கிறார். நீ எங்கடா இங்க வந்த உன்ன தான் இந்த வீட்டு பக்கம் வரக்கூடாதுன்னு சொல்லி இருக்க இல்ல என்று கேட்டுவிட்டு உன் வேலையா சுரேகா என்று சொல்ல எனக்கு தெரியாது என்று சொல்லுகிறார். உடனே சுந்தரவல்லி பண்றது எல்லாம் பண்ணிட்டு இப்ப எதுக்கு அசிங்கம் பண்ணிக்கிட்டு இருக்க என்று திட்ட எனக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை என்று சுரேகா டென்ஷன் ஆகிறார். உடனே அர்ஜுன் நான் சுரேகா சொல்லி எல்லாம் வரல, அன்னைக்கு நடந்த விஷயத்துகாக மன்னிப்பு கேட்க தான் வந்தேன் என்று சொல்லுகிறார். ஆனால் சூர்யா அவனைப் பேச விடாமல் அடி வெளுத்து வாங்குகிறார். யார் சொல்லியும் கேட்காத சூர்யா அவனை அடித்து தள்ளும் போது டேபிள் மேலே இருந்த காபியை லேப்டாப் மீது தட்டி விட அர்ச்சனா சந்தோஷப்படுகிறார்.

உடனே கோபப்பட்டு சுரேகாவை திட்ட அருணாச்சலம் முதல்ல ஒர்க் ஆகுதான்னு பாரு என்று சொல்ல எப்படி டாடி ஆகும் எல்லாம் போச்சு ஏற்கனவே ரிசார்ட்லயும் லாஸ்ட்ன்னு சொல்லி தான் கொடுத்தாங்க என்று கோபமாகி கத்த அருணாச்சலம் இதெல்லாம் உடனே சரி பண்ண முடியுமான்னு பாரு என்று சொல்ல எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பண்றேன் என சொல்லிவிட்டு சொல்கிறார். வெளியில் நந்தினி இருக்க சூர்யா கோபமாக வந்த அவ எதுக்கு இங்க வர அவ வந்தாலே ஏதாவது பிரச்சனை தான். நான் சொல்றது கரெக்டு தானே என்று சொல்ல கரெக்ட் இல்லை என்று சொல்லுகிறார். இப்ப அவ வந்ததுனால தான் அந்த காபிக்கு லேப்டாப் மேல கொட்டிடுச்சு என்று சொல்ல அதற்கு நந்தினி அது அவங்களால கொட்டல என்று சொல்ல சூர்யா கடுப்பாகி உனக்கு ஒரு இடத்துல சுயமரியாதை இல்லாம நீ அங்க போக மாட்ட இல்ல ஆனா அவ அப்படி இல்ல அவ என்ன ஜென்மம் என்று தெரியல. அவ ஒரு தீய சக்தி நீ போய் முதல்ல அந்த அர்ச்சனாக வீட்டை விட்டு வெளியே போக சொல்லு கடுப்பாகுது என்று கோபப்படுகிறார். அவங்களாவே போய்டுவாங்க சார் நீங்க வேணா கார் எடுத்துட்டு ஒரு ரவுண்டு போயிட்டு வாங்க அதுக்குள்ள போயிடுவாங்க. அது எப்படி அவங்கள மனசு வந்து வீட்டை விட்டு வெளியே போக சொல்ல முடியும் என்று சொல்ல எனக்கு யாரோட உதவி தேவை இல்லை நானே போய் அவளை வெளியே போக சொல்றேன் என்று கிளம்ப அர்ச்சனா எதிரில் வந்து நிற்கிறார்.

உன் மனசுல இந்த அளவுக்கு என் மேல வெறுப்பு வந்ததுக்கு காரணம் என்ன நான் உனக்கு என்ன கெடுதல் பண்ண நீ எதுக்கு என்னை இவ்வளவு வெறுக்கிற எனக்கு புரியல என்று சொல்ல தெரிஞ்சா மட்டும் என்ன பண்ண போற என்று கேட்கிறார். நீதான் என்னோட உலகம் நீதான் என்னோட வாழ்க்கை அப்படின்னு நான் கனவோட இருந்த கல்யாணம் நடக்கல,அதனால தான் உங்க வீட்ல இருக்குறவங்க கிட்ட மன்னிப்பும் கேட்டேன் அதுக்கு அப்புறம் என்னோட வேண்டுதல் எல்லாம் நீ நல்லா இருக்கணும் என்று தான் அப்படி இருந்தும் என்னை ஏன் உனக்கு பிடிக்கவில்லை என்று சொல்ல இந்த ஜென்மத்துல இது நடக்காது என்று சொல்லுகிறார். நீ வேணும்னா என்ன ஒரு பிரண்டா நினைச்சுகோ என்று சொல்லிவிட்டு என்ன நந்தினி என்று கேட்க ஆமாம் என்று சொல்லிவிட்டு இவர் இப்படித்தான் பேசிகிட்டு இருப்பாரு நம்ம வாங்க போகலாம் என்று அர்ச்சனாவை கூட்டிக்கொண்டு கிளம்ப போக சூர்யா கோபமாக அவளுக்கு போக தெரியாதா அன்னைக்கு அப்படித்தான் அவ கார் டோர திறந்து விடுற இந்த வேலை எல்லாம் பண்ணாத என்று நந்தினியை கண்டிக்கிறார். மறுபக்கம் அர்ச்சனா காரில் போகும்போது உன்னை எப்படி என் வழிக்கு கொண்டு வரணும்னு எனக்கு தெரியும் சூர்யா சீக்கிரமே அதை செய்வேன் என சொல்லி அர்ஜுனுக்கு போன் போடுகிறார். எடுத்த உடனே நீங்க சொன்ன வேலையை கரெக்டா முடிச்சிட்டேனா என்று கேட்க நீ கொஞ்சம் லேட்டா வந்திருந்தாலும் அங்க கதையே முடிந்திருக்கும் என்று சொல்ல இது எல்லாமே நான் சுரேகாக்காக தான் பண்ற நான் அந்த வீட்டோட மருமகன் ஆகணும் என்று சொல்ல அதுக்கு நான் பொறுப்பு என்று சொல்லி வாக்கு கொடுக்கிறார். நம்மளுக்காக தைரியமாக வீடு வரைக்கும் வந்து நின்னுட்டானே என்று அவளுக்கு ஒரு அஃபெக்ஷன் வந்து இருக்கும் என்று சொல்லிக் கொண்டிருப்பார். சுரேகா அர்ஜுனுக்கு போன் போடுகிறார்.

முதல்ல கோபப்பட்டாலும் அவ மனசுல நினைப்பா என்று சொல்ல அந்த நேரம் பார்த்து சுரேகா ஃபோன் பண்றா உங்களுக்கு அப்புறம் பண்றேன் என சொல்லி போனை வைத்துவிட்டு சுரேகாவிடம் பேசுகிறார். உடனே கோபப்பட்டு உனக்கு அறிவே இல்லையா ஏற்கனவே பர்த்டே பார்ட்டிக்கு வந்து பிரச்சனையே ஓடிக்கிட்டு இருக்கு இப்ப எல்லாரும் முன்னாடியும் வந்து மன்னிப்பு கேட்கிறேன்னு நினைக்கிற என்ன நினைச்சுகிட்டு இருக்க என்று கேட்கிறார். உடனே என் நெனப்புல ஃபுல்லா நீ தான் இருக்க, நீ வேற எல்லாரும் திட்டிட்டாங்கன்னு சொன்ன அதனால எனக்கு தூக்கமே வரல அதனால தான் மன்னிப்பு கேட்க வந்தேன் என்று சொல்ல, நீ வந்ததுனால தான் பிரச்சனையே வருது என்று கோபப்படுகிறார். உனக்கு என்ன வேணா நடக்கட்டும்னு என்னால எப்படி இருக்க முடியும் நீ நான் லவ் பண்ற பொண்ணு, உன் மேல அவங்களுக்கு இருக்குற கோவம் குறையணும்னு தான் நான் அப்படி பண்ணேன் என்று சொல்லுகிறார். உனக்கு ஒரு பிரச்சனைனா அது எனக்கும் தான் பிரச்சனை அதை எப்படியாவது சரி பண்ண தான் பாப்பேன் என்று சொல்லுகிறார். உடனே சுரேகா இப்படி எல்லாம் பண்ணாதடா என்று சொல்ல, சரிடி தங்கம் என்று சொல்ல வர ரொம்ப ஓவரா தான் போறடா என்று சொல்லுகிறார். சரி எப்போ மீட் பண்ணலாம்னு நீயே சொல்லு என்று சொல்ல சரி நானே சொல்றேன் எங்க வீட்டு வாசப்படி பக்கம் கூட தல வச்சு படுத்துடாத என்று சொல்லி போனை வைக்கிறார்.

மறுபக்கம் சூர்யா ரூமில் டென்ஷனாக கைக்கு எட்டிய நேரத்தில மிஸ் ஆயிடுச்சு என்று கோபமாக நடந்து கொண்டிருக்க, நந்தினி வந்தவுடன் கூப்பிட்டு எப்ப பார்த்தாலும் அந்த அர்ச்சனாக்கு சப்போர்ட் பண்றியே என்னை மதித்து பேசி இருக்கியா என்று கேட்க நந்தினி நான்தான் சொன்னேனே அவங்க விருந்தாளி என்று சொல்ல, அவ விருந்தாளி இல்ல பெருச்சாளி என்று சொல்லுகிறார். இப்ப சொல்லு நான் முக்கியமா அவ முக்கியமா என்று கேட்கிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் மாதவி நந்தினி இடம் வேற யாராச்சும் உன்னையும் அவனையும் பார்க்க அங்க வந்தாங்களா என்று கேட்கிறார். என்னை கடத்தி வெச்சிருந்தாங்களே அப்ப கூட வந்திருக்கலாம் அல்ல என்று சொல்ல ரேணுகா இதைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

மறுபக்கம் அர்ச்சனா மினிஸ்டரிடம் அந்த அருணாச்சலம் சூர்யாவும் மட்டும் தான் நந்தினிக்கு சப்போர்ட் பண்ணிக்கிட்டு இருக்காங்க கூடிய சீக்கிரம் அவங்களுக்கும் ஆப்பு வச்சிடுவேன் என்று சொல்லுகிறார். சூர்யா நந்தினி இடம் அந்த அர்ச்சனா நல்லவ கிடையாது என்று சொல்ல நல்லவை இல்லைன்னா அப்ப எதுக்கு தாலி கட்ட கல்யாண மண்டபம் வரைக்கும் போனீங்க என்று கேள்வி கேட்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru mudichu serial today promo 01-04-25
moondru mudichu serial today promo 01-04-25