ஜெயிலர் 2 குறித்து சூப்பர் அப்டேட் கொடுத்த யோகி பாபு..எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

ஜெயிலர் 2 படம் குறித்து யோகி பாபு லேட்டஸ்ட் தகவல் ஒன்று பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக முன்னனின் நடிகர்களுடன் இணைந்து கலக்கி வருபவர் யோகி பாபு. இது மட்டும் இல்லாமல் கதாநாயகனாகவும் பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.
இந்நிலையில் படம் நடிப்பதில் பிசியாக இருந்தாலும் யோகி பாபு அவ்வப்போது கோவில்களுக்கு சென்று சுவாமி தரிசனமும் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது குலசேகரன் பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார்
சுவாமி தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த யோகி பாபு ஜெயிலர் 2 படம் குறித்து பேசி உள்ளார் அதாவது ரஜினிகாந்த் உடன் நடித்த அனுபவம் மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்ததாகவும் அதனைத் தொடர்ந்து ஜெயிலர் 2 படத்திலும் நடித்து வருவதாகவும் சொல்லி இருக்கிறார். இது மட்டுமில்லாமல் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் அருமையாக வந்துள்ளது என்றும் அதில் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சி ரசிக்கும் படியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இவர் கூறிய இந்த தகவல் ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.
