‘மெல்லிசை’ படத்தின் டேக் லைனுக்கு, வெற்றிமாறன் பாராட்டு..

ராம் இயக்கத்தில் வெளியான ‘தங்கமீன்கள்’ படம் அப்பாவுக்கும் மகளுக்குமான பாச உணர்வை மிக இயல்பாக பேசியது. அதில், இடம் பெற்ற ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ என்ற பாடலும் பெரிய அளவில் வரவேற்பு பெற்றது.
இந்நிலையில் தற்போது கிஷோர், தனன்யா, சுபத்ரா ராபர்ட், ஜார்ஜ் மரியன், ஹரிஷ் உத்தமன், ஜஸ்வந்த் மணிகண்டன், புரோக்டிவ் பிரபாகர், கண்ணன் பாரதி உள்பட பலர் நடித்துள்ள படம், ‘மெல்லிசை’.
‘அன்பு மட்டும் அண்டம் தேடும்’ என்ற டேக்லைனை கொண்டுள்ள இப்படத்தை ‘வெப்பம் குளிர் மழை’ என்ற படத்தை தயாரித்த ஹேஷ்டேக் எஃப்டிஎஃப்எஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.
அப்பா- மகள் இடையேயான உறவை பிரதிபலிக்கும் இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் வெளியாகியுள்ளது. இயக்குநர் வெற்றிமாறன் ‘முதல் பார்வை போஸ்டரில் கிஷோர் இளமையாக இருக்கிறார். ‘அன்பு மட்டும் அண்டம் தேடும்’ என்ற டேக்லைன் படத்தின் கருவை சரியாக பிரதிபலிக்கிறது’ என்று பாராட்டியுள்ளார்.
