‘டியூட்’ படத்தில் இளையராஜா பாடல்கள்: வழக்கு தொடர நீதிமன்றம் அனுமதி..

Web Ads

பிரதீப் ரங்கநாதன் நடித்து வெளியான ‘டியூட்’ படத்​தில் இளையராஜா​வின் பாடல்​களை அனுமதியின்றி பயன்​படுத்​தி​யிருப்​பது தொடர்​பாக, தனி​யாக வழக்கு தொடரலாம் என இளை​ய​ராஜாவுக்கு உயர் நீதி​மன்​றம் அனு​ம​தி​ அளித்துள்​ளது.

பதிப்​புரிமை பெற்ற தனது பாடல்​களைப் பயன்​படுத்தி தனிப்​பட்ட முறை​யில் அதிக வரு​வாய் ஈட்டி வரு​வ​தாகக் கூறி சோனி மியூசிக், எக்கோ ரெக்​கார்​டிங், அமெரிக்​கா​வில் உள்ள ஓரியண்​டல் ரெக்​கார்ட்ஸ் ஆகிய நிறு​வனங்​களுக்கு எதி​ராக இசையமைப்​பாளர் இளை​ய​ராஜா சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​திருந்​தார்.

இந்த வழக்கை ஏற்கனவே விசா​ரித்த உயர் நீதி​மன்​றம், இளை​ய​ராஜா இசையமைத்த பாடல்களை வணிக ரீதி​யாக பயன்​படுத்தி ஈட்​டிய வரு​மானம் குறித்த விவரங்​களை தாக்​கல் செய்ய, சோனி நிறு​வனத்​துக்கு உத்​தர​விட்​டிருந்​தது.

இந்​நிலை​யில், இந்த வழக்கு நீதிபதி செந்தில்​கு​மார் முன்புமீண்​டும் விசாரணைக்கு வந்​தது. அப்​போது இளையராஜா தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் சர​வணன், இந்த வழக்கில் சோனி நிறுவனம் இன்​னும் பதில்​மனு தாக்​கல் செய்​ய​வில்லை என்​றும், தற்​போது வெளியாகி​யுள்ள ‘டியூட்’ படத்​தி​லும் இளை​ய​ராஜா​வின் 2 பாடல்​களை அனு​ம​தி​யின்றி பயன்​படுத்தி உள்​ளனர் என்​றும் கூறினார்.

சோனி நிறு​வனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் விஜய் நாராயண், இளை​ய​ராஜா​வின் பாடல்​கள் மூலம் ஈட்​டிய வரு​வாய் குறித்த விவரங்​களை சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்​தார். இந்த வழக்​கில் பதில்​மனு தாக்​கல் செய்ய தயா​ராக இருப்​ப​தாகவும் தெரி​வித்​தார்.

மேலும், இளை​ய​ராஜாவின் 500-க்​கும் மேற்​பட்ட பாடல்​களுக்கு பதிப்​புரிமை பெற்​றது தொடர்​பான வழக்கை சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் இருந்து மும்​பைக்கு மாற்​றக்​கோரு​வது தொடர்​பாக உச்ச நீதி​மன்​றத்​தில் சோனி நிறு​வனம் தொடர்ந்த வழக்​கில், இளை​ய​ராஜா பதிலளிக்க உத்​தரவிடப்​பட்​டுள்​ளது என்​றார்.

இரு தரப்பு வாதங்களை​யும் கேட்ட நீதிபதி செந்​தில்​கு​மார், வரு​மானம் குறித்த விவரங்​களை சீலிட்ட கவரில் தாக்​கல் செய்யக்​கூ​டாது என உச்ச நீதி​மன்​றம் ஏற்கனவே உத்​தர​விட்​டுள்​ள​தாகக்​ கூறி சோனி நிறு​வனம் தாக்கல் செய்த வரு​மான விவரங்​களைத் திருப்​பிக் கொடுத்​தார்.

மேலும், ‘டியூட்’ படத்​தில் தனது பாடல்​களைப் பயன்​படுத்​தி​யிருப்​பது தொடர்​பாக இளை​ய​ராஜா தனி​யாக வழக்கு தொடரலாம் என அனுமதி அளித்தார். மேலும் சோனி நிறுவனம் தொடர்ந்​துள்ள வழக்கு உச்ச நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் இருப்​ப​தாகக்​கூறி, இந்த வழக்கு விசாரணையை நவம்பர்.19-ந்தேதிக்கு தள்ளி வைத்​துள்​ளார்.

ilaiyaraaja files case against dude film over copyright issue
ilaiyaraaja files case against dude film over copyright issue