Master Vijay Character Secret
Master Vijay Character Secret

மாஸ்டர் விஜயின் கதாபாத்திரம் ஏற்கனவே நடிகர் ஒருவர் நடித்திருந்த படத்தில் இருந்து எடுக்கப்பட்டது தான் என கூறப்பட்டு வருகிறது.

Master Vijay Character Secret : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் தளபதி விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்து இருப்பதாக கூறப்பட்டது. இதற்கு முன்னதாகவே கமல் நம்மவர் படத்தில் கல்லூரிப் பேராசிரியராக நடித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ்க்கு நோ சொன்னாரா ரஜினிகாந்த்? வெளியான ஷாக்கிங் தகவல் – காரணம் என்ன?

இதனால் அந்த கதாப்பாத்திரத்தின் தழுவல் தான் இந்த கதாபாத்திரமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் வேற உலகநாயகன் கமல்ஹாசனின் தீவிர ரசிகர். மேலும் இவர் ஒருமுறை பேட்டி ஒன்றில் என்னுடைய படங்களில் கமலஹாசன் படங்களின் தழுவல் இருக்கும் என கூறியிருந்தார்.

இதனால் அந்தப் படத்தின் கதா பாத்திரம் தான் இந்த படத்திலும் இடம் பெற்றுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.