Rajinikanth and Lokesh Kanagaraj Movie Update
Rajinikanth and Lokesh Kanagaraj Movie Update

ரஜினியின் அடுத்த படம் குறித்து ஷாக்கிங் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Rajinikanth and Lokesh Kanagaraj Movie Update : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகிவரும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

மாஸ்டர் படம் எப்படி இருக்கும்? கிளைமேக்ஸ், இன்டெர்வல் பிளாக் ரகசியத்தை உடைத்த லோகேஷ் – செம மாஸ் தகவல்கள் இதோ

இந்த படத்தை தொடர்ந்து ரஜினி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசனின் தயாரிப்பில் நடிக்க இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவலின்படி இந்த படத்திற்கு ரஜினிகாந்த் நோ சொல்லும் மன நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

அதற்கு காரணம் லோகேஷ் கனகராஜ் கூறிய கதை தான் எனவும் பேசப்பட்டு வருகிறது. இதே ஒரு மாசான படமாக இல்லாமல் கமர்சியல் அல்லாத ஒரு படமாக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

இதனால் ரஜினிகாந்த் இந்த படத்தில் நடிக்க தயக்கம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.