Master Trailer Release Update
Master Trailer Release Update

மாஸ்டர் படத்தின் டிரைலர் இன்று வெளியாகலாம் என பிரபலம் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

Master Trailer Release Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படம் உலகம் முழுவதும் இன்று ரிலீசாக இருந்தது. ஆனால் தற்போது பரவி வரும் கொரானா வைரஸ் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய்க் கொண்டு வருகிறது.

விஜய், விக்ரம் ஸ்டைலில் கொரானா விழிப்புணர்வில் அசத்தும் போலீஸ் – அதுவும் எப்படி பண்ணியிருக்கிறார்கள் தெரியுமா?

இன்று மாஸ்டர் படம் ரிலீசாகி இருந்தால் எப்படி இருக்கும் என ரசிகர்கள் அவர்களின் கற்பனையை வெளிப்படுத்தி ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

இந்த நிலையில் சன் டிவி பிரபலமும் திரைப்பட விமர்சகருமான சுரேஷ்குமார் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மாஸ்டர் படத்தின் டிரைலரை இன்று எதிர்பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.

ஆனால் இவர் அதிகாரபூர்வமாக கூறுகிறாரா அல்லது இவரும் ரசிகர்களைப் போல எதிர்பார்ப்பில் கூறுகிறாரா என்பது தெரியவில்லை.

இதோ அவருடைய பதிவு

https://twitter.com/TheStagerTv_/status/1247890303572250626