Corona Awareness in Vijay Vikram Style
Corona Awareness in Vijay Vikram Style

விஜய் விக்ரம் ஸ்டைலில் கொரானா விழிப்புணர்வில் போலீசார் அசத்தியுள்ளனர்.

Corona Awareness in Vijay Vikram Style : சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்திய அளவில் தமிழகம் பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், தூய்மை பணியாளர்கள் என பலரும் இதற்கு எதிராக போராடி வருகின்றனர்.

மாஸ்டர் ரிலீஸ் பிளானை போட்டுடைத்த விஜயின் நண்பர் – இந்த தேதியில் தான் ரிலீஸ் ஆகிறதா?

மக்களை வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு போலீசார் கூறி வருகின்றனர். இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் விஜய் விக்ரமை வைத்து பொலிசார் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளனர்.

மெர்சல் படத்தில் விஜய் இரண்டு கைகளையும் தூக்கிக் கொண்டு வணக்கம் சொல்வது போல செய்து யாருக்கும் கை கொடுக்காமல் வணக்கம் சொல்லுங்கள் என கூறி வருகின்றனர்.

அதே போல் விக்ரமும் அனுஷ்காவும் ஒரு படத்தில் இடைவெளி விட்டு அமர்ந்து இருப்பதை வைத்து இதுபோன்று சோசியல் டிஸ்டன்சிங்கை பின்பற்றுங்கள் எனவும் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளனர்.