Master New Releases Date Update
Master New Releases Date Update

மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் தேதி குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

Master New Releases Date Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரிட்டோ தயாரிப்பில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ் இன்னும் பலர் நடித்துள்ளனர்.

மாஸ்டருக்கு வந்த புதிய சோதனை, கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்கும் விநியோகிஸ்தர்கள் – காரணம் என்ன தெரியுமா?

ஏப்ரல் 9ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இப்படம் கரோனா வைரஸ் தாக்குதலால் தள்ளி போய் உள்ளது.

இந்த நிலையில் இப்படத்தை ஜூன் 18-ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக விநியோகஸ்தர் ஒருவர் தியேட்டர் உரிமையாளர் ஒருவரிடம் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.