Master Producer Vs Distributors
Master Producer Vs Distributors

விநியோகிஸ்தர்கள் மாஸ்டர் படத்துக்கு கொடுத்த தொகையை திருப்பி கேட்பதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Master Producer Vs Distributors : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.

பிரிட்டோ, லலித் குமார், ஜெகதீஷ் ஆகியோர் இணைந்து இந்த படத்தை தயாரித்து உள்ளனர். படம் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போதைய சூழ்நிலையில் அதற்கு வாய்ப்பில்லை என்பது உறுதியாகி விட்டது.

துளி கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் கீர்த்தி சுரேஷ், பார்க்கவே எப்படி இருக்கார் பாருங்க – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

இது ஒருபுறமிருக்க பொதுவாகவே விநியோகிஸ்தர்கள் படம் ரிலீசான பிறகுதான் தயாரிப்பாளரிடம் அதற்கான தொகையை செலுத்துவார்கள். ஆனால் தற்போது தயாரிப்பாளர் லலித்குமார் வினியோகஸ்தர்களுக்கு போன் செய்து தொகையை செலுத்துமாறு கேட்டதாக கூறப்படுகிறது.

இதனால் கடுப்பான விநியோகிஸ்தர்கள் மாஸ்டர் படத்தை நம்பி நாங்கள் இல்லை என கொடுத்த பணத்தை திரும்ப கேட்பதாக கூறப்படுகிறது இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.