நடிகை மாளவிகா மோகனனுக்கு, ரஜினி ரசிகர்கள் ஆறுதல்..

Web Ads

பிரபல நடிகையான மாளவிகாவுக்கு “இப்படியொரு” வருத்தம் ஏற்பட்டுள்ளது. அது குறித்து காண்போம்..

சூப்பர் ஸ்டார் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ‘பேட்ட’ படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார் மாளவிகா மோகனன்.

பின்னர், தனுஷுடன் இணைந்து மாறன், விக்ரமின் ‘தங்கலான்’ படங்களை தொடர்ந்து, கார்த்தியின் ‘சர்தார் 2’ படத்தில் முக்கிய கேரக்டரில் வருகிறார். இந்நிலையில், சரியான காலச்சூழ்நிலை அமையாததால் ரஜினிகாந்த்துடன் நடிக்க வேண்டியது மிஸ் ஆகிவிட்டது என வருத்தப்பட்டுள்ளார்.

தற்போது லோகேஷ் இயக்கத்தில் உருவாகும் ‘கூலி’ படத்தில் ரஜினிகாந்தின் மகளாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறாரா? என்கிற கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

கமல்ஹாசனின் (ரியல்) மகள் சூப்பர் ஸ்டாருக்கு நிச்சயமாக ஜோடியாக நடிக்க மாட்டார் எனவும் கணிக்கப்படுகிறது. இந்த ‘மகள்’ கேரக்டரை நினைத்து தான் ஃபீலிங்ஸில் இருக்கிறார் மாளாவிகா. அதனாலென்ன, ஜெயிலர்-2 படம் என அடுத்தடுத்த படங்கள் வருது, கனவு நிறைவேறும்’ என மாளாவிகாவுக்கு ரஜினி ஃபேன்ஸ் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

 

malavika mohanan shares how she missed rajinikanth movie
malavika mohanan shares how she missed rajinikanth movie