
சிவகார்த்திகேயன் நடிக்கும் 24-வது பட இயக்குனர் மாற்றம்: காரணம் என்ன?
‘மாற்றம் ஒன்றே மாறாதது’ என்பதுபோல இதோ ‘எஸ்கே-24’ திரைப்பட நிகழ்வு அமைந்துள்ளது.
அதாவது.. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும்’ SK23′ படத்தின் ஷூட் 70 % முடிந்த நிலையில் மீதமுள்ள சீன்ஸ் ஷூட் விரைவில் துவங்கவுள்ளது.
தற்போது ஏ.ஆர் முருகதாஸ, சல்மான் கானின் படத்தை இயக்கி வருவதால் அந்த கேப்பில் சிவகார்த்திகேயன், சுதா கொங்கரா இயக்கும் ‘பராசக்தி’ படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் ஷூட்டிங் ஜூலை முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சிவகார்த்திகேயனின் 24-வது திரைப்படத்தில் தற்போது எதிர்பாராத மாற்றம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அதாவது, ‘டான்’ படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி, சிவகார்த்திகேயனின் 24-வது படத்தை இயக்குவதாக இருந்தார். ஆனால், அதற்குள் சிவகார்த்திகேயன் ‘பராசக்தி’ படத்தில் கமிட்டாகிவிட்டார். இதனால் SK24 துவங்க தாமதமானது.
இந்த இடைவெளியில், சிபி சக்கரவர்த்திக்கு நானியை வைத்து ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பு வந்துள்ளது. எனவே சிவகார்த்திகேயனிடம் பேசிவிட்டு நானியின் படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்க சென்றுவிட்டதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. சிவகார்த்திகேயனும் சிபியின் இந்த முடிவிற்கு ஓகே சொல்லிவிட்டார் என கூறப்படுகிறது.
இந்நிலையில், தற்போது SK24 திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை ‘குட் நைட்’ பட இளம் இயக்குனர் விநாயக் சந்திரசேகர் பெற்றுள்ளார். இவர் சொன்ன கதை சிவகார்த்திகேயனுக்கு மிகவும் பிடித்து விட்டதால், இந்த கதையில் தான் கண்டிப்பாக நடிப்பதாக உறுதியளித்துள்ளார்.