Maanaadu Shooting

Maanaadu Shooting : சிம்புவுடன் எடுத்து கொண்ட புகைப்படத்துடன் மாநாடு படத்தின் அப்டேட்டையும் வெளியிட்டு ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளார் வெங்கட் பிரபு.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான வந்தா ராஜாவாக தான் வருவேன் படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

சுரேஷ் காமாட்சி தயாரிக்க இந்த மாநாடு படத்திற்காக சிம்பு லண்டன் சென்று உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக இந்தியாவிற்கு என்ட்ரி கொடுத்துள்ளார்.

மிஸ்டர் லோக்கல் படத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த சிவகார்த்திகேயன் – என்னயா பண்ணி வெச்சீங்க?

நேற்று அவரது தம்பி குறளரசனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி அமரனும் கலந்து கொண்டு சிம்புவுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டுள்ளனர்.

அந்த புகைப்படத்தை வெளியிட்டு மாநாடு படத்தின் படப்பிடிப்புகள் மே மாதத்தில் இருந்து தொடங்கும் என கூறியுள்ளார் வெங்கட் பிரபு.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.