MR.Local
MR.Local

MR.Local : எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள படம் மிஸ்டர் லோக்கல்.

இப்படத்தில் சதீஷ், ராதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் ஹிப்ஹாப் ஆதி முதல்முறையாக சிவகார்த்திகேயன் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

தள்ளி போனது Mr. Local, புதிய ரிலீஸ் தேதியுடன் வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு.!

முன்னதாக இப்படம் வரும் மே 1-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பின்னர் காரணம் ஏதும் சொல்லாமல் மே 17-ம் தேதிக்கு இப்படம் தள்ளிபோவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் சதீஷ், யோகி பாபு, தம்பி ராமையா, மொட்டை ராஜேந்திரன், ஆர்.ஜே.பாலாஜி என ஐந்து நகைச்சுவை நடிகர்கள் நடித்து வருகிறார்கள்.

இருந்தும் படத்தில் துளியும் காமெடி இல்லையாம். அண்மையில் படத்தின் ரஷ் பார்த்த சிவகார்த்திகேயன் இதனால் கடும் அதிர்ச்சியடைந்தாராம்.

மேலும் சில இடங்களில் காமெடியை சேர்க்க சொல்லி கேட்டதன் பேரில் தற்போது ரீ ஷூட் நடந்து வருகிறதாம். அதனால்தான் படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளிபோய் உள்ளதாம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.