விஜய்யின் ‘தெறி’ உள்பட 5 படங்கள் ரீ-ரிலீஸ்: ரசிகர்கள் உற்சாகம்..

Web Ads

விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இப்படம் மார்ச் முதல் வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இச்சூழலில் சில ரீரிலீஸ் படங்களின் வருகை பற்றிப் பார்ப்போம்.

விஜய் நடிப்பில் அட்லீ இயக்கி வெளியாகி வரவேற்பு பெற்ற ‘தெறி’ படம், பிப்ரவரி 20-ந்தேதி ரீ ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்படத்தை கடந்த மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்தனர்.

பொங்கல் ரிலீஸ் படங்களின் தயாரிப்பாளர்கள் கேட்டுக்கொண்டதால், தெறி ரீ ரிலீஸை ஜனவரி 23-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர். ஆனால், அப்போது வெளியாக இருந்த திரெளபதி-2 படக்குழுவினர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஜனவரி 23-ந்தேதி ‘தெறி’ படம் வெளியாகாது என அறிவித்தார் அப்படத்தின் தயாரிப்பாளர் தாணு.

இந்நிலையில் ‘தெறி’ படத்தை இம்மாதம் 20-ந்தேதி திரைக்கு கொண்டு வர உள்ளனர். இந்த படம் ஏற்கனவே பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. மேலும், காதலர் தினத்தை முன்னிட்டு 4 கிளாசிக் ஹிட் படங்கள் ரீ ரிலீஸ் ஆகவுள்ளன. டி.ராஜேந்தர் இயக்கி நடித்த உயிருள்ளவரை உஷா, சூர்யா நடிப்பில் அமீர் இயக்குநராக அறிமுகமாஎன மெளனம் பேசியதே, கெளதம் மேனன் இயக்கிய முதல் படமான மின்னலே, கதிர் இயக்கிய காதலர் தினம் ஆகியவை வெளியாகின்றன.

lovers day in five movies re release
lovers day in five movies re release