Lokesh Kanagaraj Next Movie Update
Lokesh Kanagaraj Next Movie Update

மாஸ்டர் ரிலீஸ் என்பது தற்போது சாத்தியமில்லாத ஒன்றாக இருப்பதால் லோகேஷ் கனகராஜ் வேறொரு பிளானில் இறங்கியுள்ளார்.

Lokesh Kanagaraj Next Movie Update : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படத்தின் மூலமாக இயக்குனரான இவர் அந்த படத்திற்கு பிறகு கைது என்ற மெகா ஹிட் படத்தை கொடுத்து இருந்தார்.

கார்த்தி நடிப்பில் வெளியான இப்படம் தளபதி விஜயின் பிகில் படத்துடன் நேருக்கு நேர் மோதி வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது விஜய்யை வைத்து மாஸ்டர் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் அனைத்தும் முடிவுறும் தருவாயில் இப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

ஆனால் தற்போதைய சூழ்நிலையில் மாஸ்டர் ரிலீஸ் என்பது சாத்தியமில்லாத ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. இதனால் தன்னுடைய அடுத்த வேலையில் இறங்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

மாஸ்டர் ரிலீஸ் பற்றி புகைப்படம் வெளியிட்ட தியேட்டர் நிர்வாகம் – வருத்தப்பட்டு கலங்கும் விஜய் ரசிகர்கள் ( புகைப்படத்துடன் இதோ )

தற்போதைக்கு பெரிய ஹீரோக்களை வைத்து பெரிய பட்ஜெட் படங்களை இயக்குவது என்பதும் கடினமான ஒன்று. இதனால் சிறு பட்ஜெட் படமான கைதியின் இரண்டாம் பாகத்தை எடுக்கலாம் என அவர் முடிவு எடுத்துள்ளார்.

இதற்காக கார்த்தியுடன் வீடியோ காலில் பேசியுள்ளார். வெறும் முப்பது நாள் கால்ஷீட் கொடுத்தால் போதும் கைதி 2 இயக்கிடுவேன் என வாக்கு கொடுத்துள்ளார்.

இதற்கு கார்த்தி என்ன பதில் சொல்லப் போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மாஸ்டர் படத்திற்கு அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்க இருந்த நிலையில் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார் என கூறப்படுகிறது.

கொரானா தொற்று முழுமையாக முடிந்து நிலைமை சீரான பிறகு ரஜினியை வைத்து படம் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.