Rohini Theater Tweet About Master Release
Rohini Theater Tweet About Master Release

ஏப்ரல் 9-ல் மாஸ்டர் ரிலீஸ் இப்படித்தான் இருந்திருக்கும் என புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை வருத்தப்பட வைத்துள்ளது பிரபல தியேட்டர் நிர்வாகம்.

Rohini Theater Tweet About Master Release : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் இயக்க அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படம் உலகம் முழுவதும் ஏப்ரல் 9 ஆம் தேதி திரைக்கு வர இருந்தது.

உடம்பிலேயே செக்ஸியான பாகம் என்றால் அது இது தான் – மீரா மிதுன் வெளியிட்ட புகைப்படம், மேடம் எதை சொல்றாங்க பாருங்க.!

ஆனால் தற்போது கரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியா முழுவதும் லாக் டவுன் செய்யப்பட்டுள்ளது. இதன் விளைவாக மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னையில் பிரபல தியேட்டர் நிறுவனமான ரோகிணி தியேட்டர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கோலாகலமாக பட்டாசு வெடிக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ஏப்ரல் 9-ல் மாஸ்டர் ரிலீஸ் இப்படித்தான் இருந்திருக்கும் என குறிப்பிட்டுள்ளது.

இதனை பார்த்த விஜய் ரசிகர்கள் ஆமாம் நாங்கள் அந்த தேதியை மிஸ் செய்து விட்டோம் என வருத்தத்துடன் கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.