Lokesh Kanagaraj Interview Speech About Thalapathy 64 | Vijay 64 | Bigil Vs kaithi | Karthi | Kollywood Cinema News | Tamil cinema News
பிகிலுடன் கைதி திரைப்படம் மோதுவது ஏன் எனவும், விஜயின் அடுத்த படம் எப்படி இருக்கும் எனவும் லோகேஷ் கனகராஜ் பேசியுள்ளர்.

Lokesh Kanagaraj Interview Speech : தமிழ் சினிமாவின் மாநகரம் திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகி வெற்றி கண்டவர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தை தொடர்ந்து கார்த்தியை வைத்து கைதி என்ற படத்தை இயக்கி வருகிறார்.

பட்டையை கிளப்பும் தளபதி 64 போஸ்டர், ஆனால் ? – புகைப்படத்துடன் இதோ .!

கார்த்தி நடித்துள்ள இந்த திரைப்படம் வரும் தீபாவளிக்கு பிகிலுடன் மோத உள்ளது. இதற்கான காரணம் என்ன என்பதை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அதாவது ஒரு படத்தை முடித்து கொடுப்பதோடு இயக்குனரின் வேலை முடிந்து விட்டது, அதை எப்போது ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதெல்லாம் தயாரிப்பாளரின் கையில் தான் உள்ளது.

ஆகஸ்ட் மாதமே இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு தான் படத்தை தொடங்கினோம். ஆனால் கிராபிக்ஸ் வேலைகளால் தீபாவளிக்கு ரிலீஸ் என்ற நிலைக்கு வந்துள்ளது என கூறியுள்ளார்.

தளபதி 65 படத்தை நான் இயக்கல.. பதறி போய் விளக்கம் கொடுத்த இயக்குனர்.!

மேலும் தளபதி 64 குறித்து கேட்டதற்கு இவ்வளவு சீக்கிரமாக இந்த படத்தை பற்றி பேச முடியாது, ஆனால் ஒன்று இதுவரை பார்க்காத விஜயையும் விஜய் படத்தையும் தளபதி 64-ல் பார்ப்பீங்க. அதுக்கு நான் கேரண்டி எனவும் குறிப்பிட்டுள்ளார்.

லோகேஷ் கனகராஜின் இந்த பேச்சு விஜய் ரசிகர்களை உற்சாகடைய செய்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.