தனுஷ் நடித்த ‘குபேரா’ படம் ஓடிடி.யில் விற்பனை: எவ்வளவு தெரியுமா?
‘குபேரா’ படத்தின் டிஜிட்டல் உரிமை பற்றிப் பார்ப்போம்..
தனுஷ்-ராஷ்மிகா நடிப்பில் சேகர் கம்முலா இயக்கியுள்ள ‘குபேரா’ படத்தின் டிஜிட்டல் உரிமைகளை அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி நிறுவனம் வாங்கி உள்ளது.
ரூ.50 கோடி கொடுத்து குபேரா பட ஓடிடி உரிமையை அந்நிறுவனம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தம் தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரிய ஓடிடி ஒப்பந்தங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
திரையரங்குகளில் படம் ஓடி முடிந்த பிறகு, தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் குபேரா திரைப்படம் ஓடிடியில் வெளியிடப்படும். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஓடிடியில் வெளியாகும்.
‘குபேரா’ படம் தனுஷின் திரைப்பயணத்தில் அதிக பொருட்செலவில் உருவாகும் படமாகும். இந்தப் படம் ரூ.120 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தனுஷ், ராஷ்மிகா மந்தனா தவிர, நாகார்ஜுனா, ஜிம் சர்ப் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் ஜூன் 20-ந்தேதி ரிலீஸாகிறது.
படத்தில் தனுஷ், தேவா என்கிற கேரக்டரில் நடித்துள்ளார். இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
ராஷ்மிகா இந்த ஆண்டு ‘சிக்கந்தர்’ தவிர, ‘சாவா’ படத்திலும் நடித்திருந்தார். அடுத்து ‘குபேரா’ படத்தில் நடிக்கிறார். முன்னதாக, தனுஷ் இயக்கத்தில் வெளியான ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படம் சறுக்கிய நிலையில் ‘குபேரா’ மற்றும் ‘இட்லி கடை’ படங்களை பெரிதும் நம்பியுள்ளார்.
