Pushpa 2

கீர்த்தி சுரேஷின் கன்னத்தை கிள்ளிய வருண் தவான்: நெட்டிசன்ஸ் செம ஃபீலிங்ஸ்..

‘புதுப்பெண்’ கீர்த்தி சுரேஷின் கன்னத்தை வருண் தவான் கிள்ளிய சமாச்சாரம் வைரலாகி வருகிறது. இது குறித்த விவரம் பார்ப்போம்..

கோலிவுட்டிலிருந்து பாலிவுட் சென்ற இயக்குனர் அட்லி தயாரிப்பில், காளீஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘பேபி ஜான்’ திரைப்படம் நாளை தியேட்டர்களில் ரிலீஸாக இருக்கிறது.

கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று ரிலீஸாகும் இப்படத்தில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா கப்பி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விஜய்யின் ‘தெறி’ படத்தின் இந்தி ரீமேக்கான பேபி ஜான் படத்தை பெரிய அளவில் விளம்பரம் செய்து வருகிறார்கள். இந்நிலையில், விளம்பரத்திற்காக போட்டோஷூட் நடந்தது.

பாலிவுட்டில் ஒரு படம் ரிலீஸாவதற்கு முன்பு ஹீரோவும், ஹீரோயினும் நெருக்கமாக போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்துவது வழக்கம் ஆகும்.

இந்நிலையில், ‘பேபி ஜான்’ படத்திற்காக வருண் தவானும், அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் கீர்த்தி சுரேஷும் சேர்ந்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்திருக்கிறார்கள். அதைப் பார்த்துதான் தமிழ் சினிமா ரசிகர்கள் கீர்த்தி சுரேஷை விமர்சித்து வருகிறார்கள்.

கீர்த்தி சுரேஷ் கன்னத்தை கிள்ளியபடி போஸ் கொடுத்திருக்கிறார் வருண் தவான். அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்து, பிக் பாஸில் இரண்டு பேபீஸ் என தெரிவித்துள்ளார் கீர்த்தி.

அதாவது ‘பேபி ஜான்’ படத்தை விளம்பரம் செய்ய இந்தி பிக் பாஸ் வீட்டிற்கு சென்றார்கள் வருண் தவான், கீர்த்தி சுரேஷ் மற்றும் வாமிகா கப்பி. அதைத்தான் கீர்த்தி அப்படி சொல்லியிருக்கிறார்.

கோலிவுட்டிலும் ஒரு படம் ரிலீஸ் ஆகும்போது, இதேபோல ஹீரோ-ஹீரோயின் மிக நெருக்கமாக போட்டோஷூட் இருந்தால் ரசிகர்கள் முகம் சுழிப்பார்களா? ரசிப்பார்களா? என்பது அவரவர் பார்வையை பொறுத்தது.

keerthy suresh after seeing pics with baby john hero varun dhawan
keerthy suresh after seeing pics with baby john hero varun dhawan