Web Ads

மாணவர்களுக்கு நடிகர் கவின் அறிவுறுத்தல்..

Web Ad 2

தி ஷோ மஸ்ட் கோ அன் மற்றும் பிளாக் மெட்ராஸ் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ‘மாஸ்க்’ திரைப்படம், வெற்றிமாறன் மேற்பார்வையில் நடைபெற்று முடிந்து இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. வெளியாது.

வி.கர்ணன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் கவின், ஆண்ட்ரியா, ருஹானி சர்மா உள்பட பலர் நடித்துள்ளனர். இதற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதன் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கவின் பேசும்போது, ‘என்னுடைய ‘மாஸ்க்’ திரைப்படம் வெளியாயாகி இருக்கிறது. அனைவரும் கல்லூரிக்கு சென்று அன்றைய கடமைகளை முடிக்க வேண்டும்.

அதன் பிறகு சனி, ஞாயிறு விடுமுறை தினத்தன்று போய் படத்தைப் பார்த்தால் போதுமானது. ஒன்றும் பிரச்சினை இல்லை. சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமே’ என அட்வைஸ் செய்தார். இந்த வீடியோ தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

kavin advice to college students
kavin advice to college students