5 மாதங்களுக்கு பிறகு சென்னை திரும்பிய கமல்ஹாசனின் அப்டேட்ஸ்
ஏஜ தொழில் நுட்பம் பயில அமெரிக்கா சென்ற கமல் இன்று சென்னை திரும்பியுள்ளார். அவரது திரைப்பயணத்தில் அடுத்த கட்டம் என்னென்ன? என்ன தகவல்கள் பார்ப்போம்..
ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான ‘அமரன்’ படம் ரிலீஸ் ஆகும் முன்னரே, கமல்ஹாசன் அமெரிக்கா சென்றுவிட்டார். அங்கு ஏஐ தொழில்நுட்பம் தொடர்பாக படிக்க சென்றிருந்த கமல்ஹாசன், 5 மாதங்களுக்கு பின், இன்று சென்னைக்கு திரும்பியிருக்கிறார்.
சென்னை விமான நிலையத்தில் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘தக் லைஃப் படம் எந்த நிலையில் இருக்கிறது என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு வருகிற ஜூன் 5-ந் தேதி ‘தக் லைஃப்’ படம் ரிலீஸாகும் என்றார்.
பின்னர் ‘விக்ரம் 2’ வருமா? என்றதற்கு, ‘அதற்கு தான் தற்போது வேறு ஒரு ஸ்கிரிப்டை எழுதி முடித்து வந்திருக்கிறேன்’ என கூறிச் சென்றார். ஒருவேளை அவர் சொன்ன அந்த புது ஸ்கிரிப்ட், அன்பறிவு இயக்கும் படத்திற்கானதாக இருக்கலாம்’ எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
கமல்ஹாசன் நடிப்பில் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் ‘தக் லைஃப்’, ஷங்கரின் இந்தியன் 3, கல்கி 2, அன்பறிவு இயக்கும் படம் ஆகியவை உள்ளன.