நடிகர் கருணாஸின் மகன் இயக்கி ஹீரோவாக நடிக்கும் படம், அப்டேட்ஸ்..

பாலா இயக்கத்தில் வெளியான ‘நந்தா’ படத்தின் மூலம் அறிமுகமானவர் கருணாஸ். பின்னர் அடுத்தடுத்த படங்களில் நடித்து ஹீரோவாகவும் உருவெடுத்தார்.
இந்நிலையில் தனுஷ் நடித்த ‘அசுரன்’ படத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் கருணாஸின் மகன் கென் கருணாஸ். இதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். தற்போது அவரே இயக்கி, படமொன்றில் நாயகனாக நடித்து வருகிறார்.
‘காதலன்’ எனப் பெயரிட்டுள்ள இப்படத்தின் நாயகிகளாக ஸ்ரீதேவி, அனிஷ்மா மற்றும் ப்ரியன்ஷி யாதவ் ஆகியோர் நடித்து வருகிறார்கள். இதில் ‘கோர்ட்’ தெலுங்கு படத்தின் மூலம் பிரபலமானவர் ஸ்ரீதேவி என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் சுராஜ் வெஞ்சுரமுடு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இப்படம், பள்ளிக்கூடத்தை மையப்படுத்தி நடக்கும் கதை என்று கூறப்படுகிறது. இதன் இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரியவுள்ளார். சமீபத்தில் இதன் படப்பூஜை சென்னையில் நடைபெற்றுள்ளது. இதில் பல்வேறு முன்னணி நடிகர்கள் கலந்துகொண்டு கென் கருணாஸுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
