Justice for Jayapriya
Justice for Jayapriya

சாத்தான்குளம் கொடுமை முடிவதற்கு முன்னர் கொடுமை அனைவரையும் கொந்தளிக்க வைத்துள்ளது.

Justice for Jayapriya : கொரோனா வைரஸ் தாக்கம் ஒரு புறம் தமிழகத்தை வாட்டி எடுத்து வருகிறது. இதனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கால் குறிப்பிட்ட நேரத்தை தாண்டி கடையை திறந்து வைத்ததாக கூறி தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் ஆகியோர் போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டு அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்திற்கு நீதி வேண்டும் என உலகம் முழுவதும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

இந்த கொடுமை முடிவதற்குள் தமிழகத்தில் இன்னொரு கொடுமை அரங்கேறியுள்ளது.

புதுக்கோட்டையில் ஜெயப்பிரியா என்ற 7 வயது சிறுமி மூன்று காமக்கொடூரனால் சீரழிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ள சம்பவம் உச்சகட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதை சொன்னா.. ஒருத்தனும் பொண்ணை தொட மாட்டான் – சிம்பு அதிரடி பேச்சு.!

இந்த கொடூர சம்பவத்திற்கு இந்திய மக்கள் அனைவரும் நீதி கேட்டு தங்களது கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

இதுகுறித்து திரையுலகப் பிரபலங்களும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.