‘ஜனநாயகன்’ பட டிரெய்லர் வெளியீடு: ரசிகர்கள் உற்சாகம்..

Web Ads

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, கெளதம் மேனன், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜனநாயகன்’. கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

வருகிற 9-ந்தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் தணிக்கைப் பணிகள் தொடங்கியுள்ளன. படத்தைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள் பல்வேறு காட்சிகளை நீக்கவும், சில வசனங்களை மியூட் செய்யவும் அறிவுறுத்தியதாக தெரிகிறது. இதன் பணிகளை முடித்து மீண்டும் தணிக்கைக்கு அனுப்பவுள்ளது படக்குழு. அதன் பிறகு இப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படும்.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்த ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பு பெற்று வருகிறது.

jananayagan movie trailer to drop on today january 3
jananayagan movie trailer to drop on today january 3