சென்னையில் ‘ஜனநாயகன்’ பட ஷுட்டிங்: விஜய்யின் நியூ லுக்; ரசிகர்கள் குஷி
‘ஜனநாயகன்’ படத்தின் ஷுட் சென்னையில் நடைபெற்று வருகிறது. இது குறித்த அப்டேட் பார்ப்போம்..
விஜய்யின் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில், அரசியல் பேசும் கதையான ‘ஜனநாயகன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பாபி தியோல், பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரியாமணி, மமிதா பைஜு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மே மாதத்திற்குள் ஷூட்டிங் முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தின் ஷுட் முடிந்ததும், விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக தவெக மாவட்ட பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடைபெற இருக்கிறது.
‘ஜனநாயகன்’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இந்நிலையில், சென்னை போரூரில் உள்ள டி.ஆர்.கார்டனில் ஜனநாயகன் படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இதில் விஜய் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இதை அறிந்த ரசிகர்கள் அவரைக் காண அங்கு குவிந்தனர்.
இதை அறிந்த நடிகர் விஜய், தன்னைக் காண குவிந்த ரசிகர்களை பார்த்து கையசைத்துவிட்டு சென்றார். அப்போது கண்ணாடி அணிந்து புது லுக்கில் செம ஸ்மார்ட் ஆக காட்சி அளித்தார் விஜய். அந்த வீடியோ இணையத்தில் செம வைரலாகி வருகிறது.