Jagame Thandhiram Release Update
Jagame Thandhiram Release Update

தனுஷின் ஜகமே தந்திரம் படத்திற்கு அமேசான் நிறுவனம் வியாபாரம் பேசி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

Jagame Thandhiram Release Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் மற்றும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெளியான பட்டாசு ஆகிய படங்களை தொடர்ந்து தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் உலகம் முழுவதும் மே ஒன்றாம் தேதியே ரிலீசாக இருந்தது. ஆனால் பரவி வரும் கொரானா வைரஸ் தாக்கத்தால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக ரிலீஸ் செய்ய முடியாமல் தள்ளிப் போயுள்ளது.

இதனையடுத்து இப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என தெரியவில்லை. தியேட்டர்களை தற்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை என்பதால் இந்த படத்தை ஓட்டிட்டு வழியாக வெளியிட அமேசான் நிறுவனம் படக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

கைவிடப்பட்ட முதல் படம்.. மீண்டும் சிம்புவுக்கு கதை சொன்ன பிரபல இயக்குனர் – செம மாஸ் தகவல்

இந்த படத்தை அமேசான் பிரைம் வீடியோ வழியாக ரிலீஸ் செய்ய ரூபாய் 60 முதல் 65 கோடி வரை வியாபாரம் பேசியிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

ஆனால் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஒய் நாட் ஸ்டூடியோஸ் என்ன முடிவு எடுக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தியேட்டர்கள் மூடப்பட்டு இருந்ததால் அமேசான் வீடியோவில் இதற்கு முன்னதாக பொன் மகள் வந்தாள் என்ற திரைப் படம் ரிலீசானது. இதனையடுத்து நாளை கார்த்திக் சூப்பரா தயாரிப்பில் உருவாகியுள்ள பெண் குயின் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ளார். ஈஸ்வர் கார்த்திக் என்பவர் படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.