பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஜாக்லின் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ஜாக்லின் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது.18 போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டவர் ஜாக்குலின்.இவர் ஆரம்பம் முதலே நமினேஷனில் இடம் பிடித்துள்ள நிலையில் ரசிகர்கள் அவரை காப்பாற்றி வந்தனர்.ஆனால் தற்போது எதிர்பாரத விதமாக பணபெட்டி டாஸ்க்கில் 2 செகண்ட் வித்தியாசத்தில் தோற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.
இது ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் 101 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த ஜாக்குலின் 25 லட்சத்து 25 ஆயிரம் சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
