Web Ads

பொங்கல் போட்டியில் கலந்து கொண்ட சூர்யா சந்தோஷத்தில் குடும்பத்தினர் வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரைகள் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

moondru mudichu serial today promo 17-01-2025
moondru mudichu serial today promo 17-01-2025

நேற்றைய எபிசோடில் புனிதாவிடம் பிரசிடெண்ட் மகன் வம்பு இழுப்பதை ரஞ்சிதா பார்த்து விடுகிறார். உடனே நந்தினி இடம் வந்து விஷயத்தை சொல்ல உனக்கு யாருன்னு தெரியுமா என்று கேட்க நான் தூரமா தான் இருந்து பார்த்தேன் எனக்கு யாருன்னு சரியா தெரியல என்று சொல்ல நந்தினி ஒருத்தன் வழி மறைச்சு பேசுறானா இவ மேலையும் ஏதாவது தப்பு இருந்தாலும் இருக்கும் நம்ப முதல்ல இவகிட்ட விசாரிச்சுட்டு அப்புறம் கண்டிப்போம் என்று மனசில் நினைத்துக் கொண்டு ரஞ்சிதாவை போக சொல்லுகிறார்.

பிறகு உடனே புனிதா வர அவரை நிற்க வைத்து நந்தினி பேச்சு கொடுத்துக் கொண்டே இருக்க அந்தப் பையன் குறித்த விஷயத்தை புனிதா சொல்லாமல் போக நந்தினி ஒரு கட்டத்திற்கு மேல் இருக்க வைத்து நீயே சொல்லுவேன்னு பார்த்தா சொல்லல எந்த பையன் கிட்ட நின்னு பேசிகிட்டு இருந்த, பேச்சு மட்டும் தானா இல்ல ஊர் சுத்துறதும் சேர்ந்து இருக்கா என்று கேட்க புனித அழுது கொண்டே காலேஜ் போகும்போதும் வரும்போதும் டார்ச்சர் பண்ற அக்கா என்ன லவ் பண்றேன்னு சொன்னானா என்று கேட்க இல்லை என்று சொல்லி ஒரு மாசத்துக்கு மட்டும் அவன் பேச்சை நான் கேட்கணுமா அவன் சொல்ற இடத்துக்கு நான் வரவேண்டுமாம் என்று சொல்ல உடனே நந்தினி செருப்பு கழட்டி அடிக்க வேண்டியது தானே என்று கோபப்படுகிறார் இத்தனை நாளா ஏன் என்கிட்ட சொல்லல என்று சொல்ல நீ கோபப்படுவ என்று சொல்லல அதுவும் இல்லாம நீ அங்க கஷ்டப்பட்டுட்டு இருக்க, உன்னையும் சேர்த்து வச்சு பேசுற அக்கா நீ சூர்யா சார் பணத்துக்காக மயக்கி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு சொல்றான். என்று புனிதா சொன்னவுடன் நந்தினி கோபமாக பிரசிடென்ட் வீட்டிற்கு வருகிறார்.

நந்தினி வருவதை பார்த்த பிரசிடெண்ட் இவ தங்கச்சிக்கு வக்காலத்துவாக வந்திருக்காளா உன் டேஸ்ட்டு ஏன்டா இப்படி இருக்கு என்று சொல்ல நந்தினி உங்க பையன் என்ன பண்றாரு தெரியுமா தெரியாது சொல்லு என்று சொன்ன என் தங்கச்சி பின்னாடி சுத்தி வம்பு இழுத்துக்கிட்டு இருக்கா என்று சொல்ல நீ மட்டும் ரொம்ப யோக்கியம் மாதிரி பேசாத வேலைக்கு போக இடத்துல அந்த பையனை மயக்கி தாலி கட்டிக்கிட்டு தானே உன் தங்கச்சிக்கு எதுவும் சொல்லித் தரலையா என்று கேட்க நந்தினி கோபப்படுகிறார். உன் பையனுக்கு அசிங்கமான புத்தி எங்க இருந்து வந்திருக்கும் எனக்கு இப்பதான் தெரியுது இன்னொரு வாட்டி என் தங்கச்சி பின்னாடி அவள் சுத்துனானா உனக்கு பையனா இருக்க மாட்டான் என்று மிரட்டி விட்டு வருகிறார்.

உடனே கடுப்பான பிரசிடெண்ட் இவளை ஏதாவது பண்ணனும் எவ்வளவு தைரியம் இருந்தா என் வீடு ஏறி வந்து மிரட்டிட்டு போவா என்று சொல்லி உடனே சுதாகருக்கு ஃபோன் போட்டு நடந்த விஷயங்களை சொல்லி அவளை ஏதாவது பண்ணு நானே அவளை வெட்டி போட்டு இருப்ப ஆனா நான் எலக்சன்ல நிக்கணும் அவளை ஏதாவது பண்ணிட்டு எனக்கு போன் பண்ணு என்று சொல்ல உங்களுக்கு முன்னாடிலிருந்தே அவ எனக்கு எதிரி நான் பார்த்துக்கிறேன் என்று போனை வைக்கிறார் உடனே சுதாகர் சுந்தரவல்லிக்கு போன் போட அவர் என்ன விஷயம் ஏதாவது பண்ணிங்களா என்று கேட்க இப்பதா ஒரு வம்பு இழுத்து வெச்சி இருக்கா அதை வச்சு பெருசாக்கி பிரச்சனை பண்ண ஏதாவது பிளான் பண்றேன் என்று சொல்ல சுந்தரவல்லி அவர் இந்த ஊருக்கு இங்க வரவே கூடாது என்று சொல்ல சூர்யா மட்டும்தான் வருவாரே என்று சுதாகர் சொல்லி போனை வைக்கிறார். மறுபக்கம் நந்தினி வீட்டில் பொங்கல் ஏற்பாடுகள் செய்ய நந்தினியும் சூர்யாவும் வந்து அடுப்பை பத்த வைத்து அரிசி போடுகின்றனர். பிறகு பொங்கலோ பொங்கல் என அனைவரும் சொல்லி சாமி கும்பிடுகின்றனர்.

குடும்பத்தினர் அனைவரும் கரும்பு தின்று கொண்டிருக்க சூர்யாவுக்கு எப்படி கடிக்க வேண்டும் என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்க நந்தினி எப்படி சாப்பிட வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கிறார். சூர்யாவும் அதே போல் சாப்பிட்டுக் கொண்டிருக்க நந்தினி தாய் மாமாவும் அத்தையும் வருகின்றனர். நந்தினிக்கு பொங்கல் சீர் கொடுக்க நந்தினி மாமா வரலையா அத்தை என்று கேட்க அவர் வரலாமா என்று சொல்ல நந்தினி வருத்தப்படுகிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

தற்போது வெளியான ப்ரோமோவில் டிராக்டரில் சூர்யாவும் நந்தினி குடும்பத்தினரும் பொங்கல் போட்டி நடக்கும் இடத்திற்கு வருகின்றனர்.

அங்கே கண்ணை கட்டிக்கொண்டு சுத்தி விட்ட பிறகு கரெக்டாக அவர்களது மனைவியை அடையாளம் கண்டுபிடிக்க வேண்டும் என்று சொல்கின்றனர். சூர்யா கரெக்டாக நந்தினி கண்டுபிடிக்க இருவருக்கும் பரிசு கொடுக்கின்றனர். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru mudichu serial today promo 17-01-2025
moondru mudichu serial today promo 17-01-2025