நிதிநெருக்கடி காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக ஒரு தகவல் வெளியாகி வைரலாக பரவியது.
Is Darbar shooting cancelled? : பேட்ட படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்.
தர்பார் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் மும்பையில் துவங்கியுள்ளது. இப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினி ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.
நேர்கொண்ட பார்வையின் மூலம் பாடகராக அறிமுகமாகும் அஜித்? அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!
மேலும் பேட்டை படத்தைத் தொடர்ந்து இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இதன் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தற்போது மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நிதிநெருக்கடி காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக ஒரு தகவல் வெளியாகி வைரலாக பரவியது. ஆனால் படக்குழு இத்தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
மேலும் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். தமிழ் சினிமாவில் வதந்திகள் பரவுவது வழக்கம்தான். ஆனால் ரஜினிக்கே இந்த நிலமையா என எல்லோரும் வியக்கிறார்கள்.