Nerkonda Paarvai Movie updates :

Nerkonda Paarvai Movie updates இப்படத்தில் அஜித் பாடகராக அறிமுகமாவதாக ஒரு தகவல் வெளியாகி வைரலாக பரவியது.

விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தல அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.

இந்தியில் வெற்றிபெற்ற பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது.

பிக் பாஸ் சீசன் 3 குறித்து வெளியான அதிர்ச்சி செய்தி; அதிகாரப்பூர்வ தகவல் என்ன?

முன்னதாக அஜித் பிறந்தநாளான மே 1-ம் தேதி இப்படம் வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில், பின்னர் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இப்படம் குறித்து வெளியாகும் சின்னத் தகவல் கூட சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் அஜித் பாடகராக அறிமுகமாவதாக ஒரு தகவல் வெளியாகி வைரலாக பரவியது. ஆனால் அதை படக்குழு தற்போது திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.