Indian 2 Movie Shooting : Kamal Haasan, Kajal Aggarwal, Anirudh, Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, Kollywood

இந்தியன் 2 திரைப்படம் வருமா? வராதா? என்ற ரசிகர்களின் கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது.

Indian 2 Movie Shooting : தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 திரைப்படத்தை எடுக்க இருப்பதாக அறிவித்து படப்பிடிப்பையும் தொடங்கினார்.

ஆனால் தொடங்கிய நேரம் தான் சரியில்லையா என்னவோ படப்பிடிப்பு நடந்தது போலவே தெரியவில்லை. கமல்ஹாசன் அரசியல், தேர்தல், பிக் பாஸ் என பிஸியாக உள்ளார்.

கிஸ் பாய் மோகன் வைத்யா, லூசு மீரா எல்லாம் சேர்ந்து நம்மள லூஸாக்குறாங்களே – ப்ரோமோ வீடியோ.!

இதனால் இந்தியன் 2 டிராப் தான் என கூறப்பட்டு வந்தது. மேலும் ஷங்கர் இந்தியன் 2 படத்தை கைவிட்டு விட்டு முதல்வன் 2 படத்தை விஜயை வைத்து எடுக்கப் போவதாக தகவல் புயல் வேகத்தில் பரவியது.

இந்த படத்திற்காக காஜலும் புது புது வித்தையெல்லாம் கற்று கொண்டார். ஆனால் இந்தியன் 2 படப்பிடிப்பு நடக்காததால் ஐயோ பாவம் என காஜல் மீது பரிதாபப்பட்டனர்.

ஆனால் தற்போது நமக்கு கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் இந்தியன் 2 ட்ராப் எல்லாம் இல்லையாம். ஆகஸ்ட் மாதத்தில் இருந்து மீண்டும் படப்பிடிப்பு தொடங்குகிறதாம். இதனால் ரசிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.