‘காலா’ பட நடிகை ஹூமா குரேஷியின் சகோதரர் கொலை: 2 பேர் கைது..

Web Ads

பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி, தமிழில் ‘காலா’ படத்திலும் நடித்திருந்தார். இந்நிலையில், அவரது உறவினர் ஆசிஃப் குரேஷி கொல்லப்பட்டார்.

வீட்டின் வாசலில் ஸ்கூட்டி நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறு வாக்குவாதத்தில் முற்றி, கைகலப்பாக மாறி, ஹூமா குரேஷியின் உறவினர் ஆசிஃப் குரேஷி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த ஆசிஃப் குரேஷி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

இது தொடர்பாக டெல்லி போலீசார் விசாரணை நடத்தி, வீட்டின் வாசலில் ஸ்கூட்டி நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையே இந்த சம்பவத்திற்கு காரணம் என தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து ஹூமா குரேஷி இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆசிஃப் குரேஷி, ஹூமாவின் சித்தப்பா மகன் என்று கூறப்படுகிறது.

தற்போது தனது படப்பிடிப்பில் ஹூமா, 20 ஆண்டுகளுக்குப் பிறகு ‘கோஸ்லா கா கோஸ்லா-2’ என்ற படத்தில் நடிக்கிறார். 2006-ம் ஆண்டு வெளியான இந்த படத்தின் முதல் பாகத்தில் அனுபம் கெர், போமன் இராணி, ரன்பீர் ஷோரி, விஜய் ராஜ், பிரவீன் டாபாஸ் மற்றும் ஹூமா ஆகியோர் நடித்திருந்தனர். இந்த நகைச்சுவை படத்தின் 2-பாகம் தற்போது தயாராகி வருகிறது. நவம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், ஹூமாவின் உறவினர் டெல்லியில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 2 பேர் எப்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

huma qureshi cousin murdered over scooty parking dispute
huma qureshi cousin murdered over scooty parking dispute