Hockey indian League : Sports News, World Cup 2019, Latest Sports News, India, Sports, Latest Sports News, World Badminton Championship

Hockey indian League :

மெட்ராஸ் கிரிக்கெட் க்ளப் மற்றும் முருகப்பா நிறுவனம் இணைந்து வழங்கும் 93வது அகில இந்திய ஹாக்கி போட்டிகள் இன்று முதல் தொடங்க உள்ளது.

இதில் மொத்தம் 10 இந்திய அணிகள் பங்கேற்கின்றன. இன்று தொடங்கி செப்டம்பர் 5 வரை நடைபெறும் இப்போட்டிகள் எழும்பூர் அருகே உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற உள்ளன.

பற்றியெரியும் அமேசான் காடு கொந்தளித்த திரை பிரபலங்கள்.!

முதல் சுற்று ஆட்டத்தில் தமிழ்நாடு ஹாக்கி அணியும், இந்திய கப்பற்படை அணியும் மோத இருக்கின்றது . இந்த ஆட்டம் இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது.

இரண்டாவது சுற்றில் பஞ்சாப் தேசிய வங்கி அணியும், பெங்களூரு ஹாக்கி அணியும் மோத உள்ளன. இந்த போட்டி மாலை 6 மணிக்கு தொடங்கும்.

குழு ஏ மற்றும் குழு பி என்ற இரண்டு குழுக்களிலும் தலா 5 அணிகள் இடம்பெற்றுள்ளன. இவற்றுக்குள் நடைபெறும் சுற்று ஆட்டங்களில் குழுவுக்கு இரண்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு அரையிறுதி போட்டி நடைபெறும்.

இந்த போட்டியில் சாம்பியன்ஷுப் வெல்லும் அணிக்கு 6 லட்சமும், இரண்டாவது இடம் பெறும் அணிக்கு 3.50 லட்சமும் பரிசுத்தொகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.