Amazon Forest Fire
சிம்ரன் முதல் முதலாக சமூக வலைதளத்தில் கோபமாக பதிவிட்ட பதிவு அமேசான் தீப்பிடித்து எரித்துகின்றது என்பது.

Simran Tweet About Amazon Forest Fire: தமிழ் சினிமாவில் சிறந்த நடிகையாக அன்றும் இன்றும் வலம் வருபவர் நடிகை சிம்ரன். திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை முற்றிலும் நிறுத்திவிட்டார். மேலும் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாகவும் உள்ளார்.

இருந்தும், மீண்டும் சிம்பரன் மறுபிரவேசம் செய்துள்ளார் சிம்ரன். வாரணம் ஆயிரம், சிம்மராஜ போன்ற படங்களில் நடித்து இருந்தார். மேலும் சூப்பர் ஸ்டார் பேட்ட படத்தில் அவருக்கு ஜோடியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

அதை தொடர்ந்து, விக்ரம் நடிப்பில் வெளிவர இருக்கும் துருவ நட்சத்திரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

துருவுடன் கைகோர்த்த சிவகார்த்திகேயன் – ஆதித்ய வர்மாவின் அடுத்த அதிரடி.!

இந்த நிலையில் முதல் முறையாக சிம்ரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கோபமான பதிவு ஒன்றை பதிவிட்டு இருந்தார். ” ஆமேசான் காடுகள் 20% பூமிக்கு ஆக்சிசன் தருவத்துவதில் உதவி புரிகின்றது.

தற்போது அது பத்திக்கொண்டு எரிகின்றது. ஆனால், அதனை பற்றி யாரும் பேசிக்கவும் இல்லை அதனை பற்றி சிந்திக்கவும் இல்லை, இது மிகவும் முக்கியமான விஷயம் என்றும் அதனை கவனிக்காத பொறுப்பற்று உள்ளோம் ” என்று மிகவும் காட்டமாக பதிவிட்டு உள்ளார்.

சிம்ரன் மட்டும் இல்லாமல் இந்த அமேசான் காடு எரிந்ததை பற்றி மற்ற பிரபலங்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.