மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க மறுத்துள்ளாரா? முழு விவரம் இதோ.!!
மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க மறுத்து விட்டாரா என்பது குறித்து பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
அதனைத் தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் சத்யராஜ், அமீர்கான், ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்தப் படத்தில் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் ரஜினிகாந்த் அடுத்து யார் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்ற கேள்வியும் ரசிகர்கள் மனதில் இருந்து வருகிறது.
அந்த வகையில் சமீபத்தில் மாரி செல்வராஜ் கதையை ரஜினியிடம் சொன்னதாகவும் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து விட்டதாகவும் சில தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை என்றும் அந்தத் தகவல் உண்மை இல்லை என்றும் தற்போது சொல்லப்படுகிறது.
