GV Prakash gave Asuran Update : Asuran, Dhanush, GV.Prakash , Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

GV Prakash gave Asuran Update :

இப்படத்தின் பாடல் பணிகளுக்காக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், தூக்கம் தொலைத்து வேலை பார்த்து வருவதாக டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி நான்காவது முறையாக இணைந்திருக்கும் படம் அசுரன். கொடி படத்தை தொடர்ந்து இப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். பூமணியின் வெக்கை எனும் நாவலை தழுவி இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

பிகில் படத்தில் இணைந்த ஹாலிவுட் பிரபலங்கள் – அதுவும் எதுக்காக தெரியுமா?

தமிழ் சினிமாவின் பிஸி நடிகரான ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அண்மையில் நிறைவுக்கு வந்தது.

இதைதொடர்ந்து பின் தயாரிப்பு வேலைகளையும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படம் அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி விடுமுறையில் வெளியாகும் என தகவல் கசிந்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் பாடல் பணிகளுக்காக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், தூக்கம் தொலைத்து வேலை பார்த்து வருவதாக டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.