வேலையில்லாத இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி - தமிழக அரசோடு கைகோர்க்கும் அமெரிக்க நிறுவனம்.!

Free Working Skills Practice for TN Youngsters : தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு மிகவும் துரிதமாக செயல்பட்டு வருகிறது. இந்தப் பேரிடர் காலத்தில் தமிழக மக்களுக்கு என்ன தேவை என்பதை நன்கு அறிந்து செயலாற்றி வருகிறது.

தமிழகத்தில் வேலையின்மையை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலமாக ஏற்கனவே வேலைவாய்ப்பின்மை சதவீதம் வெகுவாக குறைக்கப்பட்டு உள்ள நிலையில் மேலும் இதனை குறைக்க தமிழக அரசு புதிய யுக்தியை கையில் எடுத்துள்ளது.

கொரோனாவுக்கு எதிராக ரோபோ சங்கர் செய்த வேலையை பாருங்க!!

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இயங்கி வரும் கோர்ஸெரா நிறுவனமும் இணைந்து தமிழகத்தைச் சேர்ந்த 50 ஆயிரம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்க முன் வந்திருப்பதாக கூறப்படுகிறது.

இணையவழியில் இலவசமாக அளிக்கப்படும் இந்த பயிற்சியில் கலந்துகொள்ள இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், மாநிலத்தின் திறன் பயிற்சிகளுக்கான ஒருங்கிணைப்பு முகமையாகச் செயல்படுவதுடன் தொழில் நிறுவனங்கள், தொழில் நிறுவனக் கூட்டமைப்புகள், பயிற்சி நிறுவனங்கள், துறை திறன் குழுமங்கள், மதிப்பீடு செய்யும் நிறுவனங்கள் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் அமைப்புகள் ஆகிய திறன் தொடர்புடைய அனைவரையும் ஒருங்கிணைக்கிறது.

கலிபோர்னியாவின் இயங்கிவரும் இந்த கோர்ஸெரா நிறுவனம் 3900 சிறப்புப் பயிற்சி வகுப்புகள், 13 புரொஃபஷனல் வகுப்புகள், 20க்கும் மேற்பட்ட பட்டம், பட்டமேற்படிப்பு வகுப்புகளை நடத்துகிறது.

2 Patients Recovered from Corona in Dangerous Stage

விருப்பமுள்ள இளைஞர்கள் இந்த இலவசதிறன் மேம்பாட்டு பயிற்சியில் பங்கேற்று பயன் பெறுமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.