Robo Shankar
Robo Shankar

Robo Shankar Work for Corona Patients  : கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளே சந்தித்து, அவர்களின் மன அழுத்தத்தை போக்கும் விதத்தில் நடிகர் ரோபோ ஷங்கர் ஒரு புது முயற்சியை கையில் எடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சுற்றுவட்டாரத்தில் உள்ள கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், அங்குள்ள கொரோனா வார்டுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த லாக்டோன் காலகட்டத்தில் மற்ற நடிகர்களை போல இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக களத்தில் இறங்கி, கொரோனா நோயாளிகளிடையே நிலவும் மன அழுத்தத்தை குறைக்க முடிவு செய்துள்ளார்.

நாடுகள் சுயநலம் காட்டினால் கொரோனாவை வீழ்த்த முடியாது: WHO எச்சரிக்கை!!

அதற்காக ரோபோ சங்கர் மற்றும் திண்டுக்கல் செந்தில் ஆகியோர் தங்களது சொந்த செலவில் பட்டுக்கோட்டைக்கு சென்று, ஆட்சியர் அனுமதியுடன் நோயாளிகள் முன்பு பல குரலில் பேசி மகிழ்வித்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ரோபோ சங்கர், கொரோனா தொற்றாளர்களை தனிமைப்படுத்த வேண்டுமே தவிர ஒதுக்கி வைக்கக்கூடாது எனக்கூறினார்.

பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட்டை போல, தமிழ்நாட்டிலும் இந்த கொரோனா தாக்கத்தால் அவதிப்படும் மக்களுக்கு உதவும் எண்ணம், ரோபோ சங்கர் மற்றும் திண்டுக்கல் செந்தில் ஆகியோருக்கு ஏற்பட்டுள்ளதை எண்ணி பலர் தரப்பிலிருந்து பாராட்டுக்கள் குவிகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.