பிரபாஸின் ‘ஃபௌஜி’ டிசம்பர் 3-ல் உலகம் முழுவதும் ரிலீஸ்… மிரட்டலான புதிய போஸ்டர் வெளியீடு!

Web Ads

‘ரெபெல் ஸ்டார்’ பிரபாஸ் நடிப்பில், இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கியுள்ள பிரம்மாண்ட பான் இந்திய திரைப்படமான ‘ஃபௌஜி’ (Fauji) திரைப்படம், வரும் டிசம்பர் 3 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், டி-சீரிஸ் வழங்கும் இப்படத்தின் வெளியீட்டு தேதியை அறிவிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள புதிய போஸ்டர் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஏற்கனவே வெளியான டைட்டில் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள புதிய போஸ்டர் படத்தின் பிரம்மாண்டத்தையும், உணர்வுபூர்வமான கதையையும் வெளிப்படுத்துகிறது. குறிப்பாக, இதுவரை இல்லாத அளவிற்கு வித்தியாசமான தோற்றத்தில் பிரபாஸ் காட்சியளிப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

போரின் கொடூரத்தை உணர்த்தும் அந்த போஸ்டரில், கடுமையான போருக்குப் பிறகு ரத்தக்கறைகளும் காயங்களும் படிந்த உடலுடன், சோர்வடைந்த நிலையிலும் உறுதியை இழக்காத வீரராக பிரபாஸ் அமர்ந்திருக்கிறார். அவரைச் சுற்றி போரில் உயிரிழந்த வீரர்களின் உடல்கள், புகை சூழ்ந்த போர்க்களம் ஆகியவை படத்தின் தீவிரமான பின்னணியை உணர்த்துகின்றன.

நீண்ட தலைமுடி, அடர்த்தியான தாடி, காயங்களால் சிதைந்த உடல்வாகு, ரத்தம் தோய்ந்த வெள்ளை வேட்டி என முழுமையாக மாறுபட்ட தோற்றத்தில் பிரபாஸ் ரசிகர்களை கவர்ந்துள்ளார். எந்த வசனமும் இல்லாமல், அவரது முகபாவனைகள் மூலமே தியாகம், வேதனை, மன உறுதி, தைரியம் போன்ற உணர்வுகள் வெளிப்படுவது இந்த போஸ்டரின் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது.

இந்த போஸ்டர், படத்தில் இடம்பெறும் முக்கியமான சண்டைக் காட்சியில் இருந்து உருவாக்கப்பட்டதாக படக்குழு தெரிவித்துள்ளது. அதிரடியான ஆக்சன் மட்டுமல்லாமல், ஆழமான உணர்வுகளையும் கொண்ட திரைப்படமாக ‘ஃபௌஜி’ உருவாகி வருவதாகவும், இந்த போஸ்டர் மூலம் ரசிகர்களுக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Web Ad 2

வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. ஒரு போஸ்டரே இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையில், திரையரங்குகளில் படம் மிகப்பெரிய சினிமா அனுபவத்தை வழங்கும் என்ற நம்பிக்கையை ரசிகர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.

‘ஃபௌஜி’ படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக இமான்வி நடித்துள்ளார். மேலும் அனுபம் கெர், மிதுன் சக்கரவர்த்தி, ஜெயப்பிரதா, பானு சந்தர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சுதீப் சட்டர்ஜி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். தயாரிப்பு வடிவமைப்பை அனில் விலாஸ் ஜாதவ் மேற்கொண்டுள்ள நிலையில், படத்தொகுப்பை கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் கவனித்துள்ளார்.

தொழில்நுட்பக் குழு:

எழுத்து & இயக்கம்: ஹனு ராகவபுடி
தயாரிப்பு நிறுவனம்: மைத்ரி மூவி மேக்கர்ஸ்
வழங்குபவர்கள்: குல்சன் குமார், பூஷன் குமார், டி-சீரிஸ் பிலிம்ஸ்
தயாரிப்பாளர்கள்: நவீன் யெர்னேனி, ஒய். ரவிசங்கர், பூஷன் குமார்
ஒளிப்பதிவு: சுதீப் சட்டர்ஜி
இசை: விஷால் சந்திரசேகர்
தயாரிப்பு வடிவமைப்பு: அனில் விலாஸ் ஜாதவ்
படத்தொகுப்பு: கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ்
VFX: ஆர்.சி. கமலா கண்ணன்
மக்கள் தொடர்பு: யுவராஜ்
மார்க்கெட்டிங்: ஃபர்ஸ்ட் ஷோ