Fans Request to Thala 60 Team : Nerkonda Paarvai Trailer, Thala Ajith, Vidya Balan, H.Viinoth, Boney Kapoor, Yuvan Shankar Raja

Fans Request to Thala 60 Team :

இன்னொரு பக்கம் அஜித் இப்படத்தில் ரிஸ்க் எடுத்து நடிப்பார் என்ற வருத்தமும் ஏற்பட்டுள்ளது

விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தல அஜித்தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.

இந்தியில் வெற்றிபெற்ற பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது.

இதைதொடர்ந்து அஜித் நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது. அஜித்தின் அடுத்த படத்தை வினோத்தான் இயக்குவர் என்றும் இது ஃபிரெஷ்ஷான ஒரு கதை என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

இப்படத்தில் அஜித் போலிஸாக நடிக்கவிருப்பதாகவும் சொல்லி இருந்தோம் ஆனால் அது மட்டும் இல்லையாம் இப்படத்தில் அஜித் பைக் ரேஸராகவும் நடிக்கிறார்.

தல 60-ல் அஜித் பைக் ரேஸர் இல்லை, ஆனால்? – வெளியான பக்கா மாஸ் அப்டேட்.!

அவருடைய நிஜ திறமையை வெளிப்படுத்தும் விதமாக இப்படத்தில் நிறைய கார் சேஸிங் காட்சிகள் இடம்பெறும் என கூறப்படுகிறது.

இது ஒரு பக்கம் அவருடைய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்தாலும் இன்னொரு பக்கம் அஜித் இப்படத்தில் ரிஸ்க் எடுத்து நடிப்பார் என்ற வருத்தமும் ஏற்பட்டுள்ளது,

அஜீத் தன்னுடைய சண்டை காட்சிகளில் பெரும்பாலும் அவரே டூப் போடாமல் ரிஸ்க் எடுத்து நடிப்பார் இதனால் உடலில் பல இடங்களில் ஆபரேஷன் செய்துகொண்டு தற்போது வரை இவர் அதற்காக சிரமப்படுகிறார்.

இதனால் அடுத்த படத்திலும் இது போல் எதுவும் நடந்து விடக்கூடாது என இவருடைய ரசிகர்கள் வேண்டுகோள் வைக்கின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.