இந்தியன் 3: ஷங்கரின் முடிவை லைகா நிறுவனம் ஏற்குமா?

கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்து ரிலீஸான இந்தியன் 2 நெகடிவ்வான விமர்சனங்களையே சந்தித்தது. மேலும்,ரெம்ப டல்லான வசூலையும் பெற்றது.

இதனால், படத்தில் இருந்து 12 நிமிட காட்சிகளை நீக்கி, நேரத்தைக் குறைத்தனர். ஆனால், அப்போதும் அந்த படம் ரசிகர்களை தியேட்டருக்குள் ஈர்க்கவில்லை.

இந்நிலையில், இந்தியன் 3 மீது ரசிகர்களுக்கு இருந்த எதிர்பார்ப்பு நீர்த்துப் போய்விட்டது.

இதனால், இந்தியன் 3 படத்தை நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடத்தியது லைகா நிறுவனம். அதற்கு இயக்குனர் ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் ஒத்துக் கொள்ளவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் சில காட்சிகளை ஷூட் செய்து படத்தை தியேட்டரில்தான் வெளியிடவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

இந்நிலையில், மீண்டும் ஷூட் செய்வதற்கான பட்ஜெட் தொகையாக ஷங்கர் 100 கோடி ரூபாய் தயாரிப்பு நிறுவனத்திடம் கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஏற்கனவே, இந்தியன் 3 படத்துக்கு எதிர்பார்ப்பே இல்லாத நிலையில், லைகா நிறுவனம் ஷங்கரின் இந்த முடிவை ஏற்குமா?

ஒருவேளை ஏற்க மறுத்தால், ஷங்கர் தனது தயாரிப்பு நிறுவனம் மூலமாக படத்தை முடித்து வெளியிடுவாரா? என்றெல்லாம் கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

director shankar in indian 3 shooting update
director shankar in indian 3 shooting update