Director Selva About Ajith
Director Selva About Ajith

அஜித் நடிக்க வந்த புதிதில் அவருடைய கனவு சினிமா இல்ல என் முதல் பட இயக்குனர் கூறியுள்ளார்.

Director Selva About Ajith : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். அமராவதி என்ற படத்தின் மூலமாகத்தான் சினிமாவில் அறிமுகமானார்.

இந்தப் படத்தை செல்வா இயக்க தலைவாசல் விஜய், நாசர், சார்லி மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்தின் இயக்குனர் அஜித்துடன் பணிபுரிந்தது குறித்து பேசியுள்ளார்.

தகுதிக்கு ஏற்றார்போல பேசுங்கள்.. ஜோதிகாவை பேச்சுக்கு திரௌபதி இயக்குனர் கொடுத்த பதிலடி.!

அஜித் நடிக்க வந்தபோது அவருடைய கனவு சினிமா அல்ல. நடிக்கணும் பெரிய நடிகனாக வேண்டும் என்றெல்லாம் அவர் ஆசைப்படவில்லை. அவருடைய கனவு முழுவதும் ரேசில் தான் இருந்தது.

நடிகர்களின் வீட்டிற்குச் சென்றால் அவர்கள் மற்றும் நடிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தான் மாட்டி வைத்திருப்பார்கள். ஆனால் அஜித் வீடு அப்படி இருக்காது.

அவரின் அறை முழுவதும் வித விதமான பைக்கின் போட்டோக்கள் தான் ஒட்டப்பட்டிருக்கும். ஆனால் விபத்துக்குப் பிறகு அஜித் சினிமாவில் தன்னை செதுக்கி கொண்டு இதையே தன்னுடைய தொழில் ஆக்கிக் கொண்டார்.

அவரின் உழைப்பும் தன்னம்பிக்கையும் தான் இந்த இடத்தில் அவரை வைத்திருப்பதற்கான காரணம் எனவும் கூறியுள்ளார்.