‘வீரதீரசூரன்’ இயக்குனருக்கு திருமணம்: திரைப் பிரபலங்கள் நேரில் வாழ்த்து..
இன்று முகூர்த்த நாள் என்பது தெரிந்ததே. அதில், சினிமா டைரக்டர் அருண்குமார் பற்றிப் பார்ப்போம்..
மதுரை அருகே உள்ள பரவை எனும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் இயக்குனர் அருண்குமார், சென்னையில் கல்லூரி படிப்பை படித்துக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட நிலையில் சினிமா ஆர்வத்தினால் ‘நாளைய இயக்குநர்’ சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.
பின்னர், விஜய் சேதுபதி நடிப்பில் ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தை 2014-ம் ஆண்டு இயக்கி இயக்குனராக அறிமுகமான அருண் குமார், மீண்டும் ‘சேதுபதி’ படத்திலும் இணைந்தனர்.
இதே கூட்டணி சிந்துபாத் படத்தின் மூலம் ஹாட்ரிக் அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த படம் சரியாக போகவில்லை. சித்தார்த் தயாரித்து நடித்த ‘சித்தா’ திரைப்படம் அருண் குமாருக்கு வெற்றிப் படமாக மாறியது.
இதனையடுத்து தற்போது விக்ரமை வைத்து ‘வீர தீர சூரன்’ படத்தை 2 பாகங்களாக இயக்கி வருகிறார். 2-ம் பாகம் இந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்சூழலில், இயக்குநர் அருண்குமார் திருமணம் இன்று நடைபெற்ற நிலையில், திருமண புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. மேலும், அவரது திருமணத்தில் சினிமா பிரபலங்கள் பங்கேற்று இயக்குனரையும் அவரது மனைவியையும் வாழ்த்தியுள்ளனர்.
விக்ரம், விஜய் சேதுபதி, சித்தார்த், இயக்குநர் விக்னேஷ் சிவன், எஸ்.ஜே.சூர்யா, நடிகை துஷாரா விஜயன் என பலரும் நேரில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.
