சிவனின் அருளாசியில், காந்தாரா சேப்டர் 1 இசை ஆல்பத்திற்காக, தில்ஜித் தோசாஞ் ஒரு பாடல் பாடியுள்ளார் !!

Web Ads

தேசிய விருது பெற்ற நடிகர்-பாடகர் தில்ஜித் தோசாஞ், (Diljit Dosanjh) இயக்குநர்–நடிகர் ரிஷப் ஷெட்டியுடன் காந்தாரா சேப்டர் 1 இசை ஆல்பத்திற்காக கைகோர்த்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் உணர்ச்சிமிகு பதிவொன்றை பகிர்ந்த தில்ஜித், காந்தாரா திரைப்படம் தன்னை எவ்வளவு ஆழமாக பாதித்தது என்பதை நினைவுகூர்ந்து பகிர்ந்துள்ளார் :

“காந்தாரா என்ற அற்புத படைப்பை உருவாக்கிய என் சகோதரர் @rishabshettyofficial க்கு பெரு வணக்கம். இந்த படத்துடன் எனக்கு ஒரு தனிப்பட்ட தொடர்பு இருக்கிறது, அதை இப்போது சொல்ல முடியாது. ஆனால் திரையரங்குகளில் வராஹ ரூபம் பாடல் ஒலித்தபோது, பேரானந்தத்தில் கண்ணீர் விட்டேன்.”

Web Ad 2

மேலும் வரவிருக்கும் ப்ரீக்வல் குறித்து தனது உற்சாகத்தை வெளிப்படுத்திய தில்ஜித்.., இசையமைப்பாளர் B. அஜனீஷ் லோக்நாத்திற்கு (B. Ajaneesh Loknath) நன்றி தெரிவித்தார். “ஒரே நாளில் அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்,” என்று குறிப்பிட்டார்.

தில்ஜித் தோசாஞ் – ரிஷப் ஷெட்டி கூட்டணி, ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிக்கும் காந்தாரா சேப்டர் 1 படத்திற்கு, புதிய இசை பரிமாணத்தை தருமென எதிர்பார்க்கப்படுகிறது.

காந்தாரா சாப்டர் 1 திரைப்படம், வரும் அக்டோபர் 2, 2025 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளது.