ஜாலியா வாங்க, ஜாலியா போங்க: அக்கா மகன் பவிஷை ஹீரோ ஆக்கிய தனுஷின் டீசர் வாய்ஸ்

தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ பட டீசர் பற்றிப் பார்ப்போம்..

தனுஷ், தனது சகோதரி மகன் பவிஷ் மற்றும் அனிகா சுரேந்திரன், பிரியா வாரியார் ஆகியோரை வைத்து ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இப்படம் வரும் 21-ந் தேதி வெளியாகிறது. தற்போது இப்பட டிரைலர் வெளியிடப்பட்டு உள்ளது.

டிரைலர் ஓபனிங்கில், ‘ஸ்டைலாய் அமர்ந்தவாறு, கையில் கிளாசை வைத்துக் கொண்டு, ‘இது ரொம்ப சாதாரண கதைதான்’ என இன்ட்ரோ கொடுத்துள்ளார்.

அடுத்த ஃபிரேமில் வரும் பவிஷ், ‘இது ஒரு பையன்…இது ஒரு பெண்ணு.. இந்த பையனும் பெண்ணும் காதலிக்கிறார்கள். அப்போ இந்த பையன் யாரு? அது தான் எக்ஸ் பாய் பிரண்டுக்கும் எக்ஸ் கேர்ள் பிரண்டுக்கும் கல்யாணம்..’ என இளசுகளை கவரும் வகையில் காதல், ரொமான்ஸ், டேட்டிங், பிரேக் அப் என ஜாலியான படத்தை எடுத்திருக்கிறார் தனுஷ்.

ஹீரோவாக அறிமுகமாகி இருக்கும் பவிஷ், பார்ப்பதற்கு தனுஷின் ஜெராக்ஸ் போல இருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் இசையில், பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. மேலும், இந்த படத்தைப் பார்த்த எஸ்.ஜே. சூர்யா, இயக்குனர் மாரி செல்வராஜ் படத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர்.

பொறுத்திருந்து பார்ப்போம், டீன் ஏஜ் ரசிகர்கள் என்ன ரிசல்ட் தரப்போகிறார்கள் என.!