Web Ads

கூலி வரான் சொல்லிகோ..வெளியான chikitu பாடல்..கொண்டாடும் ரசிகர்கள்.!!

கூலி படத்தின் chikitu பாடல் வெளியாகி உள்ளது.

coolie movie Chikitu Music Video is out now
coolie movie Chikitu Music Video is out now

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். மேலும் நாகர்ஜுனா,ஸ்ருதிஹாசன், சத்தியராஜ், உபேந்திரா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏக்கசக்கமாக ரசிகர்களிடையே இருந்து வந்த நிலையில் ஏற்கனவே ரஜினிகாந்த் இந்த படத்தில் முதல் பாகத்தை பார்த்து பாராட்டி இருந்தது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் chikitu என்ற என்ற பாடல் வீடியோ வெளியாகி உள்ளது.இந்த பாடலுக்கு ரஜினிகாந்த், அனிருத்,சாண்டி மாஸ்டர், டி ராஜேந்தர் என நால்வரும் நடனமாடியுள்ளனர்.

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகிறது.